Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

முஸ்லிம் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஒடுக்குமுறையை உடனடியாகவே கைவிட்டு சடலங்களை அவர்களின் விருப்பப்படியே அடக்குவதற்கு இடம் கொடுக்க வேணடும்! பொ. ஐங்கரநேசன்

T

The Leader Desk

டிசம்பர் 17, 2020 • 3:48 PM

முஸ்லிம் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஒடுக்குமுறையை உடனடியாகவே கைவிட்டு சடலங்களை அவர்களின் விருப்பப்படியே அடக்குவதற்கு இடம் கொடுக்க வேணடும்! பொ. ஐங்கரநேசன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முஸ்லிம் மக்களின் சடலங்களைக் கட்டாய எரியூட்டும் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  • இவற்றைப் போன்றதே இஸ்லாமியர்களது உயிர்த்தெழுதல் நம்பிக்கையுமாகும்.
  • அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த மக்களும் தாங்கள் கடைப்பிடிக்கும் மத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே தங்களின் இறுதிக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பர்.
எழுத்து அளவு:

கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முஸ்லிம் மக்களின் சடலங்களைக் கட்டாய எரியூட்டும் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த மக்களும் தாங்கள் கடைப்பிடிக்கும் மத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே தங்களின் இறுதிக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பர். அந்த வகையில் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் தங்களின் சடலங்கள் அடக்கப்படுவதையே மரபாகக் கொண்டுள்ளனர். இஸ்லாம் மதத்தவர்கள் வால் எலும்பு என்று அழைக்கப்படும் முள்ளந்தண்டின் கடைசி எலும்பான குயிலலகு எலும்பில் இருந்தே உயிர்த்தெழல் நிகழ்வதாக நம்புகின்றனர்.  

இந்து மதத்தவர்கள் மறு பிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள். பௌத்தர்களும் மறு பிறப்பில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். கிறிஸ்தவர்கள் இறப்பின் பின்னர் நியாயத் தீர்ப்பின் அடிப்படையிலேயே சொர்க்கமும், நரகமும் தீர்மானிக்கப்படுவதாக நம்புகிறார்கள். உணர்வுபூர்வமான இந்நம்பிக்கைகளை எவரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை; பண்பாடு சார்ந்த இவ்விடயங்களை அறிவியல் ரீதியாக எவரும் ஆராய்வதில்லை.

இவற்றைப் போன்றதே இஸ்லாமியர்களது உயிர்த்தெழுதல் நம்பிக்கையுமாகும்.

முஸ்லிம் மக்களது சடலங்களை எரியூட்டுவதற்குச் சமூகத்தின் சகல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளபோதும் அரசாங்கம் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. மாறாக, மாலைதீவில் மனிதக் குடியிருப்புகளற்ற தீவொன்றில் அடக்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவும் பௌத்த, சிங்களப் பேரினவாதத்தின் ஒரு வெளிப்பாடே ஆகும்.

இலங்கை குடிமக்களாகத் தங்களை உணரும் முஸ்லிம் மக்களை இலங்கைக்கு வெளியே அடக்கம் செய்வது என்பது அவர்களை இலங்கையில் வேரிழக்கச் செய்யும் முயற்சியின் ஒரு கட்டமே ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைக் கையாள்வது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் புதைப்பதை தடைசெய்வதாகக் குறிப்பிடவில்லை. எரிப்பதோ புதைப்பதோ எதுவாயினும் மக்களின் நம்பிக்கைகள் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கம் புதைத்தால் வைரஸுகள் நீரால் பரவலடையும் என்று அறிவியலுக்கு ஒவ்வாத காரணத்தைக் காட்டி முஸ்லிம்களின் சடல விவகாரத்தைக் கையாண்டு வருகிறது.

கொரோனாவைச் சாட்டாக வைத்து முஸ்லிம் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஒடுக்குமுறையை உடனடியாகவே கைவிட்டு சடலங்களை அவர்களின் விருப்பப்படியே புதைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...