Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த், கமலஹாசன் கட்சிகள் கூட்டணி யாரோடு!

T

The Leader Desk

டிசம்பர் 13, 2020 • 2:41 PM

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த், கமலஹாசன் கட்சிகள் கூட்டணி யாரோடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சென்னையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த தேர்தலில் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது குறித்து, கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஜனவரி 2021-ல் அறிவிப்பார் என, அவரது மனைவி மற்றும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
  • சட்டமன்றத் தேர்தலுக்காக சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் 'மக்கள் நீதி மையம்' கட்சித் தலைவர் கமல் ஹாசன் தமது முதல் கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
  • தடைகள் குறித்து அனுபவம் இருக்கிறது.
எழுத்து அளவு:

சென்னையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அக்கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க வரி வசூலிப்பதை கைவிடக் கோரியிருக்கிறார்கள்.
புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு 40,000 கோடி ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும், மக்கள் மற்றும் வியாபாரிகள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல் & டீசல் போன்ற எரிபொருளின் விலை உயர்வை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும் எனவும் தேமுதிக மாவட்ட செயலலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

மேலும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழகத்தின் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது குறித்து, கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஜனவரி 2021-ல் அறிவிப்பார் என, அவரது மனைவி மற்றும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தலில் கட்சிக்காக, விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்வார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அதோடு சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி பற்றி கமல் என்ன சொன்னார்?

சட்டமன்றத் தேர்தலுக்காக சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் 'மக்கள் நீதி மையம்' கட்சித் தலைவர் கமல் ஹாசன் தமது முதல் கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

அதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த கமலஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போலீசார் தங்கள் பிரசாரத்துக்கு கடைசி நேரத்தில் தடை விதித்திருப்பதாகத் கமல் தெரிவித்தார்.

மேலும் அது பற்றிக் கூறிய அவர், "எங்களுக்கு தடைகள் புதிது இல்லை. தடைகள் குறித்து அனுபவம் இருக்கிறது. அதற்கான ஒத்திகையும் பார்த்து விட்டோம். பதற்றமின்றி மக்களை சென்று சேர்வோம்" என்று தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்கு என்று கேட்டு அவர் ட்வீட் செய்தபோது ஏன் பிரதமர் நரேந்திர மோதிக்கு டேக் செய்யவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

"தற்போது செய்து விடலாம்" என்று அதற்கு கமல் பதில் சொன்னார். கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சையான கருத்தைப் பேசியதால் பிரச்சாரம் தடை செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, "கருத்து யாருக்கு குத்தலாக இருக்குமோ அவர்கள் தடைகளை செய்வார்கள், அதனை மீறியும் பிரசாரம் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.

கட்சிகள் பிளவுபடவும், கூடவும் வாய்ப்பு...

மக்கள் நீதி மையம் மற்றும் ஆன்மிக அரசியல் ஒன்று சேருமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், "கட்சிகள் பிளவு அடையவும் வாய்ப்பு உள்ளது. கூடவும் வாய்ப்பு உள்ளது. அதை மட்டும் கூற இயலும்" என்று தெரிவித்தார் அவர். மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு சாத்தியமே. ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூறமுடியாது என்று தெரிவித்தார் அவர்.

கமல் ஹாசனின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் உள்ளரங்கக் கூட்டங்களில் தங்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...