Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பது மனித உரிமை மீறல்! புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

T

The Leader Desk

டிசம்பர் 12, 2020 • 4:22 AM

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பது மனித உரிமை மீறல்! புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், யாழ்.
  • புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி, புத்தளம் நகர் ஊடக தபால் நிலைய சுற்றுவட்டம் வரை சென்றது.
  • மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்லியாஸ், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மது சலீம்கான் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
எழுத்து அளவு:

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்லியாஸ், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மது சலீம்கான் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது சுகாதார நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி, புத்தளம் நகர் ஊடக தபால் நிலைய சுற்றுவட்டம் வரை சென்றது. இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் தீப்பந்தங்களையும், மாதிரி ஜனாஸா ஒன்றையும் கையில் ஏந்திய நிலையில் பேரணியாக சென்றனர்.

இதன்போது கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பது மனித உரிமை மீறல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனாவால் உயிரிழக்கும் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் போது, இலங்கையில் மாத்திரம் அனுமதி மறுக்கப்படுவது பெரும் அநியாயமாகும் எனவும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...