Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ரத்கம ஆற்றில் உயிரிழந்த நிலையில் தேரரின் சடலம் மீட்பு!

T

The Leader Desk

டிசம்பர் 10, 2020 • 4:56 PM

ரத்கம ஆற்றில் உயிரிழந்த நிலையில் தேரரின் சடலம் மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் தேதி மாலை துறவியின் சடலத்தை ரத்கம பொலிசார் கண்டுபிடித்தபோது, தேரரின் இரு பாதங்களும் டயர் ஒன்றில் கட்டப்பட்டும் கொங்கிறீட் தூண் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த நிலையில் ரத்கம ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 59 வயதுடைய இந்த துறவி சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
  • துறவியின் கொலை தொடர்பாக காலி தலைமை நீதவான் ஹர்ஷனா கெகுனவெல நேற்று (09) காலை மஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

8 ஆம் தேதி மாலை துறவியின் சடலத்தை ரத்கம பொலிசார் கண்டுபிடித்தபோது, தேரரின் இரு பாதங்களும் டயர் ஒன்றில் கட்டப்பட்டும் கொங்கிறீட் தூண் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த நிலையில் ரத்கம ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

6 ஆம் திகதி முதல் ஆரண்ய மடத்தில் இருந்து துறவியைக் காணவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துறவி யாரோ ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.



சுமார் 59 வயதுடைய இந்த துறவி சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துறவியின் கொலை தொடர்பாக காலி தலைமை நீதவான் ஹர்ஷனா கெகுனவெல நேற்று (09) காலை மஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.

காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி, ஜானகி வருஷாவிதானவும் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.


தெற்குக்கு பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி ரொஷன் சில்வா உள்ளிட்ட மூன்று பொலிஸ் குழுக்களின் தலைமையில் கொலை தேரரின் கொலை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...