Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பிரேத அறைகளில் ஏற்கப்படாத நிலையில் உள்ள சடலங்களை எரிக்குமாறு ஆலோசனை!

T

The Leader Desk

டிசம்பர் 9, 2020 • 5:29 PM

பிரேத அறைகளில் ஏற்கப்படாத நிலையில் உள்ள சடலங்களை எரிக்குமாறு ஆலோசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா காரணமாக மரணித்த நிலையில், அவர்களது உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காததன் காரணமாக, உடல் தகனத்தை பகிஷ்கரித்து முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்களது உறவினர்களின் சடலங்களை ஏற்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில், கொரோனா தொற்று காரணமாக மரணித்த சுமார் 19 உடல்கள் உறவினர்களால் ஏற்கப்படாத நிலையில், தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சட்டமா அதிபர் மேற்படி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

குறித்த விடயம் சுகாதாரப் பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்பு என்பதை சுட்டிக்காட்டி, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக, சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி, நிஷாரா ஜயரத்ன, தெரிவித்தார்.

கொரோனா காரணமாக மரணித்த நிலையில், அவர்களது உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காததன் காரணமாக, உடல் தகனத்தை பகிஷ்கரித்து முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்களது உறவினர்களின் சடலங்களை ஏற்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...