இதன்மூலம் நாட்டின் அரசியல் கட்டமைப்பு முழுவதும் மடுரோவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
80 வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மடுரோ கூட்டணி 67.6 வீத வாக்குகளை வென்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரப் போட்டியில் இருந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ இந்தத் தேர்தலை புறக்கணித்தார்.
குவைடோவை வெனிசுவேலாவின் சட்டபூர்வத் தலைவராக அமெரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்தன.
புறக்கணிப்பை மீறி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் 18 வீத வாக்குகளை வென்றுள்ளனர்.
எனினும் இந்தத் தேர்தலில் 31 வீத வாக்குப்பதிவே இடம்பெற்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தலைவர் இன்டிரா அல்பொன்சோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலை ‘மோசடியானது மற்றும் வெட்ககரமானது’ என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
‘சட்டவிரோதமான மடுரோ அரசு வெளியிட்டிருக்கும் தேர்தல் முடிவுகள் வெனிசுவேல மக்களின் விருப்பை பிரதிபலிக்கவில்லை’ என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
277 ஆசனங்கள் கொண்ட வெனிசுவேல பாராளுமன்றம் 2015 தொடக்கம் எதிர்க்கட்சி கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. சட்டம் நிறைவேற்றல் மற்றும் அரசின் வரவுசெலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் செயற்பாடுகளை பாராளுமன்றம் மேற்கொண்டபோதும் 2017 இல் அதன் அதிகாரத்தை குறைக்கும் வகையில் ஜனாதிபதி மடுரோ தேசிய சட்டவாக்க சபை ஒன்றை அமைத்தார்.
மடுரோ அரசில் வெனிசுவேல பொருளாதாரம் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதோடு உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது.
வெனிசுவேலாவின் 4.5 குடியேறிகள் மற்றும் அகதிகள் உலகெங்கும் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கூட்டணிக்கு வெற்றி!
T
The Leader Desk
டிசம்பர் 8, 2020 • 3:53 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இதன்மூலம் நாட்டின் அரசியல் கட்டமைப்பு முழுவதும் மடுரோவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
- வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மடுரோ கூட்டணி 67.6 வீத வாக்குகளை வென்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தெரிவித்துள்ளது.
- குவைடோவை வெனிசுவேலாவின் சட்டபூர்வத் தலைவராக அமெரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்தன.
- புறக்கணிப்பை மீறி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் 18 வீத வாக்குகளை வென்றுள்ளனர். எனினும் இந்தத் தேர்தலில் 31 வீத வாக்குப்பதிவே இடம்பெற்றிருப்பதாக தேசிய தேர்தல் கௌன்சில் தலைவர் இன்டிரா அல்பொன்சோ தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

