Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

எவ்வளவு நாட்கள் போராட்டத்தில் இருப்பீர்கள் "போராட்டம் முடியும்வரை இருப்போம்"!

T

The Leader Desk

டிசம்பர் 6, 2020 • 4:22 PM

எவ்வளவு நாட்கள் போராட்டத்தில் இருப்பீர்கள் "போராட்டம் முடியும்வரை இருப்போம்"!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இப்படி சுமார் 10 தமிழர்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தற்போது இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
  • தாங்கள் 300 பேர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க ரயிலில் முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால், அதையடுத்து தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதால் டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டதாகவும், மீண்டும் முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
  • அதன் பிறகு, மீண்டும் டெல்லி செல்ல முயன்ற அந்த சங்கத்தினரை போலீசார் கைது செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
  • தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு நிர்வாகிகள் தம்முடன் இருப்பதாகவும், இது தவிர தங்கள் அமைப்பைச் சேர்ந்த மேலும் 6 பேர் தனியாக வந்து போராட்டத்தில் வேறு இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இப்படி சுமார் 10 தமிழர்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தற்போது இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தவிர நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கு லாபகரமான விலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கடந்த காலங்களில் டெல்லியில் நடத்திய சிறிய போராட்டங்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆனால், அவர்களால் இந்தப் போராட்டத்தில் வந்து பங்கேற்க முடியவில்லை. இது குறித்து கடந்த வாரம் அய்யாக்கண்ணுவிடம் பிபிசி தமிழ் விசாரித்தது. தாங்கள் 300 பேர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க ரயிலில் முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால், அதையடுத்து தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதால் டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டதாகவும், மீண்டும் முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு, மீண்டும் டெல்லி செல்ல முயன்ற அந்த சங்கத்தினரை போலீசார் கைது செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்க வந்தவர்கள்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதே அமைப்பைச் சேர்ந்த சிலர் எப்படியோ டெல்லி வந்து சேர்ந்துவிட்டனர்.

அவர்களில் போராட்டத் தலத்தில் இருந்த ஜோதிமணி என்பவரிடம் கருத்து தெரிவிக்கையில்

அவர் தம்மை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் என்று அறிமுகம் செய்துகொண்டார். தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு நிர்வாகிகள் தம்முடன் இருப்பதாகவும், இது தவிர தங்கள் அமைப்பைச் சேர்ந்த மேலும் 6 பேர் தனியாக வந்து போராட்டத்தில் வேறு இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களுக்கு பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் போராட்டக் குழுவினர், உணவு, தங்குவதற்கும், குளிப்பதற்குமான இடங்களைத் தந்து சகோதரத்துவத்துடன் இணைத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

எவ்வளவு நாட்கள் போராட்டத்தில் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு "போராட்டம் முடியும்வரை இருப்போம்" என்று கூறினார் அவர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எவ்வளவு நாட்கள் போராட்டத்தில் இருப்பீர்கள் "போராட்டம் முடியும்வரை இருப்போம்"! | Tamil Leader | We Lead the Nation