தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை திங்கட்கிழமை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து தகுந்த நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்பேன் எனக் கூறினார். விரைவில் இது தொடர்பாக ரஜினிகாந்திடமிருந்து அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் நண்பரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் புதன்கிழமை (டிசம்பர் 2 ) போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்திடம் அரசியல் தொடர்பாக பேசியவற்றை வெளியிட மறுத்தார்.
மேலும், "தமிழக மக்களிடம் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் ரஜினிகாந்திற்கு கிடையாது. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ, அதை அவ்வப்போது சொல்லியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாது" என்று தமிழருவி மணியன் கூறினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதை அவர் சொன்னால்தான் தானும் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறிய தமிழருவி மணியனிடம், அவரது உடல்நலத்தில் அக்கறை உள்ள மனிதராக என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டபோது, "அவரது உடல்நலனில் அக்கறை இருப்பதால், அதற்கு ஊறுவிளைவிக்காதபடி அரசியலுக்கு வருவது பற்றி சிந்தியுங்கள் என சொல்லிவிட்டு வந்தேன்" என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? தமிழருவி மணியனின் பதில்
T
The Leader Desk
டிசம்பர் 2, 2020 • 11:59 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை திங்கட்கிழமை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.
- இந்த நிலையில், ரஜினிகாந்தின் நண்பரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் புதன்கிழமை (டிசம்பர் 2 ) போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.
- இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்திடம் அரசியல் தொடர்பாக பேசியவற்றை வெளியிட மறுத்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

