Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும்! ஆயதுல்லாஹ் அலி கொமைனி

T

The Leader Desk

நவம்பர் 30, 2020 • 4:05 AM

ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும்! ஆயதுல்லாஹ் அலி கொமைனி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஈரான் அணு ஆயுதத் திட்டத்தின் கட்டமைப்பாளராக இஸ்ரேல் மற்றும் மேற்குலக அரசுகள் நம்பும் மொசன் பக்ரிசதாஹ்வின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று கொமைனி கடந்த சனிக்கிழமை உறுதி அளித்திருந்தார்.
  • ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட 2015 அணு சக்தி உடன்படிக்கையில் இருந்து டிரம்ப் விலகிக் கொண்டதை அடுத்து அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
  • ‘ஈரான் இதற்கு சரியான வகையில் பதிலடி கொடுக்கும்’ என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
  • பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

ஈரான் அணு ஆயுதத் திட்டத்தின் கட்டமைப்பாளராக இஸ்ரேல் மற்றும் மேற்குலக அரசுகள் நம்பும் மொசன் பக்ரிசதாஹ்வின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று கொமைனி கடந்த சனிக்கிழமை உறுதி அளித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பில் இஸ்ரேல் மீது ஈரான் ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டை சுமத்தினார். இது அமெரிக்காவில் பதவிக்கு வரவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் ஈரானுடனான எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் சிக்கலாக்குவதாக உள்ளது.

ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட 2015 அணு சக்தி உடன்படிக்கையில் இருந்து டிரம்ப் விலகிக் கொண்டதை அடுத்து அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானின் உச்ச அதிகாரத்தை பெற்றிருக்கும் கொமைனி, ஒருபோதும் ஆணு ஆயதத்தை நாடவில்லை என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்செயல் தொடர்பில் விசாரணை செய்து தாக்குதல்தாரிகள் மற்றும் அதற்கு உத்தரவிட்டவர்களை தண்டிப்பதற்கு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பக்ரிசதாஹ் பொது வெளியில் அதிகம் தெரியாதவராக இருந்தபோதும் ஈரான் அணு ஆயுதச் செயற்பாட்டில் பிரதான பங்கு வகிப்பவர் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. டெஹ்ரானில் வைத்து அவரது கார் வண்டி சுற்றிவளைக்கப்பட்டு சரமாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

‘ஈரான் இதற்கு சரியான வகையில் பதிலடி கொடுக்கும்’ என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

‘உலகளாவிய ஆணவம் கொண்ட சியோனிச கூலிப்படையின் கறைபடிந்த கைகளால் மீண்டும் ஒருமுறை ஈரானிய புதல்வனின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது’ என்று அவர் இதன்போது தெரிவித்தார். இதில் அவர் இஸ்ரேலை குற்றம்சாட்டும் சொற்பிரயோகத்தையே பயன்படுத்தி இருந்தார்.

இந்தக் கொலை தொடர்பில் தமக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உறுதியாகத் தெரிவித்ததாக இஸ்ரேலிய அமைச்சர் ட்சச்சி ஹெனக்பி தெரிவித்துள்ளார்.

ஈரானின் எச்சரிக்கையை அடுத்து சில நாடுகளின் இஸ்ரேல் தூதரகங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பில் கருத்துக் கூற வெள்ளை மாளிகை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ அதேபோன்று பைடனின் அதிகார மாற்றக் குழு மறுத்துள்ளன. பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுடன் அணு சக்தி உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் ஜெர்மனி மற்றும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அனைத்துத் தரப்புகளையும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...