Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மாவீரர்களை உறவினர்கள் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது!

T

The Leader Desk

நவம்பர் 20, 2020 • 4:54 PM

மாவீரர்களை உறவினர்கள் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும், இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால், அது மாகாணத்திற்குரிய விடயமாக கருதமுடியாது என்றும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களைத் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது.
  • எதிர் மனுதாரர்கள் சார்பாக, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
  • அதனையடுத்து விண்ணப்பம் சம்பந்தமான உத்தரவை மதியம் 2 மணிக்கு வழங்குவதாகத் தெரிவித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் விடயத்தை ஒத்திவைத்தார்.
எழுத்து அளவு:

மேலும், இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால், அது மாகாணத்திற்குரிய விடயமாக கருதமுடியாது என்றும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களைத் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது. ஆனால், கூட்டாகச் சேர்ந்து மாவீரர் தினம் என்ற போர்வையில் செய்வது தேசிய பாதுகாப்போது சம்பந்தப்பட்ட விடயம் எனவும், அதை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தனது தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்.

மனுதாரர்களான வல்வெட்டித்துறை - கம்பர்மலையைச் சேர்ந்த சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் அல்வாயைச் சேர்ந்த வேலும்மயிலும் ஆகியோரால் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக குறித்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய, இந்த விடயம் இன்று காலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், கே.சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

எதிர் மனுதாரர்கள் சார்பாக, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

எதிர் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், மாகாண மேல் நீதிமன்றுக்கு இந்த வழக்கை நடத்துவதற்கு நியாயாதிக்கம் இல்லை என ஆட்சேபனை எழுப்பியதோடு, மாகாண சபை நிரலில் இல்லாத மனுக்கள் இவை என்றும், இந்த மனுக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், ஊறு விளைவிப்பதாகவும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், கட்டளை வழங்கப்பட்டால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும்,மத்திய அரச சட்டத்தின் கீழும் இந்த மனுதாரர்கள் குற்றங்களைப் புரிவார்கள் எனவும் நீதிமன்றில் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனையடுத்து விண்ணப்பம் சம்பந்தமான உத்தரவை மதியம் 2 மணிக்கு வழங்குவதாகத் தெரிவித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் விடயத்தை ஒத்திவைத்தார்.

மீண்டும் பிற்பகலில் 2 மணிக்கு கட்டளை வழங்குவதற்காக, மன்று கூடியபோது, இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால்,அது மாகாணத்திற்குரிய விடயமாக கருதமுடியாது என்றும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது எனவும், கூட்டாக பொது இடத்தில் நினைவுகூரலை மேற்கொள்வது தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்றும், அதை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தனது தீர்ப்பின்போது தெரிவித்து எழுத்தாணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கைப் பார்வையிடுவதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபரும், சட்டத்தரணியுமான அஜித் ரோஹண மன்றுக்கு வருகைதந்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...