Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சஹ்ரானின் மனைவிக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!

T

The Leader Desk

நவம்பர் 19, 2020 • 4:18 PM

சஹ்ரானின் மனைவிக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் சாட்சியமளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியவுக்கு நவம்பர் 10ஆம் திகதி எழுதிய அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.
  • சஹ்ரானின் மனைவி இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாமை குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மொஹமட் சஹ்ரானின் மனைவி பாத்திமா காதர் சாதியா, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள வெலிக்கட சிறையில் இருந்து வெலிகந்தவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய மையம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் சாட்சியமளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியவுக்கு நவம்பர் 10ஆம் திகதி எழுதிய அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

"சாதியா கொரோனா  வைஸால் பாதிக்கப்பட்டுள்ள வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து வெலிகந்தவில் அமைக்கப்பட்டுள்ள  சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டமை தொடர்பிலான தகவல் வெளியான நிலையில், இது குறித்த கரிசனை அதிகரித்துள்ளது”

சஹ்ரான் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பது தொடர்பில் சாதியா பாத்திமா  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளிப்படுத்தியதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எங்கே இருக்கிறீர்கள்?

சஹ்ரானின் மனைவி இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாமை குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

"அனைத்து விளக்கமறியல் கைதிகளினதும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான சட்டபூர்வமான பொறுப்பை நிறைவேற்ற உங்கள் அலுவலகம் செயற்படும் என நாங்கள் நம்புகிறோம். இந்த கடிதம் தொடர்பில் உடனடியான அவதானத்தை எதிர்ப்பார்க்கின்றோம். கைதியின் உயிரைப் பாதுகாக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், சாதியா இருக்கும் இடம் மற்றும்  மற்றும் அவரது தற்காலிக ஆரோக்கியத்திற்கு பொறுப்பான அதிகாரிகளின் விபரங்கள்  குறித்து தபால் மூலம் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவும்” 

கைதிகளின் உரிமைகள் குறித்து ஆராயவும், மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்யவும், கைதிகளின் நலன் தொடர்பில் ஆராயவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் காணப்படுவதாக செயலாளர் தமாரா விமலசூரியவின் கையெழுத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடிதத்தின் நகல்கள், கொரோனா தொற்றை  தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...