Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

டயானா கமகே,அரவிந்தகுமார் இருவருக்கும் ஆளும் கட்சி ஆசனங்கள்!

T

The Leader Desk

நவம்பர் 16, 2020 • 10:06 AM

டயானா கமகே,அரவிந்தகுமார் இருவருக்கும் ஆளும் கட்சி ஆசனங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆளும் கட்சியின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
  • இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியின் ஏனைய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி பகுதியிலேயே தனியாக ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
  • எனினும், தமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 09 பேருக்கும் ஆளும் தரப்பில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுத்திருந்தார்.
எழுத்து அளவு:

ஆளும் கட்சியின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சபாநாயகரிடம் இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியின் ஏனைய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி பகுதியிலேயே தனியாக ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

எனினும், தமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 09 பேருக்கும் ஆளும் தரப்பில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்டதுடன், திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

டயானா கமகே

அருணாச்சலம் அரவிந்தகுமார்

இஷாக் ரஹ்மான்

பைசல் காசிம்

H.M.M. ஹரிஸ்

M.S.தௌபீக்

நசீர் அஹமட்

A.A.S.M.ரஹீம்

முஷர்ரப் முதுனபீன்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...