Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அமெரிக்கா மின் உற்பத்தி நிலைய முதலீட்டுத் திட்டமொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்து!

T

The Leader Desk

நவம்பர் 15, 2020 • 4:51 PM

அமெரிக்கா மின் உற்பத்தி நிலைய முதலீட்டுத் திட்டமொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றைய (15) Sunday Times செய்தியின்படி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அலுவலகம் இரு அமெரிக்க நிறுவனங்களுக்காக ‘எதிர்பாரா திட்டங்களை’ அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதுடன், அமைச்சர்கள் இந்த திட்டங்களை ஏற்றுக் கொள்ளவிருக்கிறார்கள்.
  • அதன்படி, இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்க அரசாங்கம் 1 கிலோவோட் மணி நேர மின்சாரத்தை ரூ.18.29க்கு அரசாங்க மின்சார சபைக்கு விற்பதற்காக 5 வருட ஒப்பந்தத்தில் ஒப்பமிடப்படவிருக்கிறது.
  • அதன்போது 330 மெகாவோட் உற்பத்தி செய்யும் மின் நிலையத்தை அமைத்தல், உரிமைகொள்ளல் மற்றும் நடாத்திச் செல்லல் (BOO) என்ற அடிப்படையில் ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் உடன்படுகிறது.
எழுத்து அளவு:

இன்றைய (15) Sunday Times செய்தியின்படி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அலுவலகம் இரு அமெரிக்க நிறுவனங்களுக்காக ‘எதிர்பாரா திட்டங்களை’ அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதுடன், அமைச்சர்கள் இந்த திட்டங்களை ஏற்றுக் கொள்ளவிருக்கிறார்கள். அந்த பத்திரிகை செய்தியின்படி, அமெரிக்காவின் New Fortress மற்றும் General Electric ஆகிய பிரபல நிறுவனங்கள் அவசர எரிசக்தித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மின் உற்பத்தி நிலையங்களை (LNG) அமைக்க அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ ஸ்டிப்லிட்ஸ் ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஒகஸ்ட் பொதுத் தேர்தலுக்கு முன்பு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இந்த மின் உற்பத்தி முதலீட்டுத் திட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். அதன்படி, இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்க அரசாங்கம் 1 கிலோவோட் மணி நேர மின்சாரத்தை ரூ.18.29க்கு அரசாங்க மின்சார சபைக்கு விற்பதற்காக 5 வருட ஒப்பந்தத்தில் ஒப்பமிடப்படவிருக்கிறது. அதன்போது 330 மெகாவோட் உற்பத்தி செய்யும் மின் நிலையத்தை அமைத்தல், உரிமைகொள்ளல் மற்றும் நடாத்திச் செல்லல் (BOO) என்ற அடிப்படையில் ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் உடன்படுகிறது.

மறு உற்பத்தி செய்யக் கூடிய எரிசக்தி குறித்து பல்வேறு கதைகளைக் கூறி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் முந்தைய ரணில்- மைத்திரி அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எரிபொருள் மின் நிலையங்களை அமைத்து வருகின்றன.

இந்த பாரிய முதலீடுகளுக்கான விற்பனைப் பிரதிநிதியாக அமெரிக்கத் தூதுவர் செயற்படுகிறார். அதோடு, நிறுவனங்களின் இலாபங்களுக்காகவும், அவர்களுக்குக் கிடைக்கும் கமிஷன்களுக்காகவும் ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...