Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தியவன்னாவ வாவியில் படகு விபத்தில் இறந்தவரின் சடலத்தை ஒப்படைக்க மறுப்பு!

T

The Leader Desk

நவம்பர் 14, 2020 • 3:23 AM

தியவன்னாவ வாவியில் படகு விபத்தில் இறந்தவரின் சடலத்தை ஒப்படைக்க மறுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தியவன்னாவ வாவியில் இராணுவத் தளபதியின் உத்தியோக இல்லத்திற்கு அருகாமையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ரவீந்திரன் என்ற 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்காமைக்கு எதிராக இன்று (13) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
  • நீரில் மூழ்கி இறந்தவரின் சடலம் நேற்று (12) ரஜமல்வத்தை பிரதேசத்தில் தியவன்னாவ வாவிக் கரையில் மிதந்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.
  • அதில் ஒருவர் நீரில் மூழ்கி 11ம் திகதி அதிகாலை 01.00 மணியளவில் காணாமல் போயுள்ளார்.
  • நீந்தி உயிர் பிழைத்த 29 வயதுடைய அடுத்த நபர் இராணுவத் தளபதியின் இல்லத்தில் பாதுகாப்பிலிருந்த அதிகாரிகளினால் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

தியவன்னாவ வாவியில் இராணுவத் தளபதியின் உத்தியோக இல்லத்திற்கு அருகாமையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ரவீந்திரன் என்ற 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்காமைக்கு எதிராக இன்று (13) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

நீரில் மூழ்கி இறந்தவரின் சடலம் நேற்று (12) ரஜமல்வத்தை பிரதேசத்தில் தியவன்னாவ வாவிக் கரையில் மிதந்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இறந்தவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகக் கூறி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

தியவன்னா வாவியில் அனுமதியின்றி மீன் பிடிப்பதாகக் கிடைத்த தகவலொன்றிற்கமைய அங்கு சென்ற பாதுகாப்புப் அதிகாரிகளின்; படகு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனுமதி பெறாத படகில் மோதியமையால் அதில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் வாவிக்குள் விழுந்துள்ளனர். அதில் ஒருவர் நீரில் மூழ்கி 11ம் திகதி அதிகாலை 01.00 மணியளவில் காணாமல் போயுள்ளார். நீந்தி உயிர் பிழைத்த 29 வயதுடைய அடுத்த நபர் இராணுவத் தளபதியின் இல்லத்தில் பாதுகாப்பிலிருந்த அதிகாரிகளினால் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிலகாலமாக தியவன்னா வாவியில் மீன் பிடிப்பதை வழமையாக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் மீன் பிடிப்பதற்காக பொல்துவ பாலத்திற்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பு வலையை அகற்றி பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து மீன் பிடிப்பதற்காக வலை வீசிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் தாம் மீன் பிடித்துக் கொண்டிருப்பது இராணுவத் தளபதியின் வீட்டிற்கு பின்புறம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவித்த போதிலும் அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பே படகொன்றில் வேகமாக பாதுகாப்பு அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். கடும் இருட்டு காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் வந்த படகு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகில் மோதி விபத்து நடந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...