Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை!

T

The Leader Desk

நவம்பர் 11, 2020 • 3:31 PM

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடிகர் விஜய் "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
  • அந்த கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
  • அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மதுரை, திருச்சி போன்ற இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
எழுத்து அளவு:

நடிகர் விஜய் "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மதுரை, திருச்சி போன்ற இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

விஜய் மேடைகளிலும் சினிமா சார்ந்து மட்டுமில்லாமல் அரசியலையும் சேர்த்து பேசுவார். இதனிடையே "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் கட்சி பெயர் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த விஜய் அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை. அந்த கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர் தனது அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் எஸ். ஏ. சந்திரசேகர் கேட்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனிடையே மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த கூட்டங்களில் விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்குத்தான் கட்டுப்படுவோம் என்றும் எஸ். ஏ. சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இணையமாட்டோம் என்றும் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...