Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மாந்தை மேற்கு கிராம சேவகரின் படுகொலையைக் கண்டித்து மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டம்!

T

The Leader Desk

நவம்பர் 6, 2020 • 5:03 PM

மாந்தை மேற்கு கிராம சேவகரின் படுகொலையைக் கண்டித்து மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரனின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
  • ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதான குறித்த கிராமசேவகரின் சடலம் கள்ளியடி – ஆத்திமோட்டை வீதியிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • அவரது இறுதிக்கிரியைகள் கள்ளியடி இந்து மயானத்தில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றன.
எழுத்து அளவு:

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரனின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலையைக் கண்டித்து மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதான குறித்த கிராமசேவகரின் சடலம் கள்ளியடி – ஆத்திமோட்டை வீதியிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடமைகளை நிறைவு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய கிராம உத்தியோகத்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது இறுதிக்கிரியைகள் கள்ளியடி இந்து மயானத்தில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...