Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை நியமனம்!

T

The Leader Desk

நவம்பர் 1, 2020 • 3:38 PM

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை  நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்படுவது என்றால் அந்த கூட்டமைப்பின் செயலாளர் தான் முக்கியம்.
  • நேற்று மூன்று கட்சி தலைவர்களும் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயம் எடுக்கப்பட்டது.
  • சிவஞானம் அவர்கள் 3 கட்சிகள் கூட்டமைப்பாக இயங்குவதில் இருக்கின்ற சட்ட ரீதியான கருத்தை முன்வைத்தார்.
எழுத்து அளவு:

ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்படுவது என்றால் அந்த கூட்டமைப்பின் செயலாளர் தான் முக்கியம். தேர்தல் ஆணையகத்திற்கு கூட்டமைப்பில் இணைந்து கொண்டு கட்சிகளின் பெயர்கள் மற்றது பதவி வகிப்பவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவிக்க வேண்டும் என சட்டம் சொல்லுகின்றது.

நேற்று மூன்று கட்சி தலைவர்களும் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயம் எடுக்கப்பட்டது. அவர்களின் இந்த விடயம் பரிசீலிக்கப்பட்டு முறைப்படியான ஒரு செயலாளரை நியமிக்க வேண்டியது சட்ட தேவையாக இருந்த காரணத்தினால் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய செயலாளர் நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது என இலங்கை தமிழரசு கட்சியின் துணை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

சி.வி.கே. சிவஞானம் அவர்கள் 3 கட்சிகள் கூட்டமைப்பாக இயங்குவதில் இருக்கின்ற சட்ட ரீதியான கருத்தை முன்வைத்தார். தனது இல்லத்தில் இருந்த பிரதியை கொண்டுவந்து கட்டமைப்பாக இருக்காத படியால் தமிழரசு கட்சியின் செயலாளரே தேர்தல் கடமை செய்தாலும் இப்போது தேர்தல் சட்டத்தை பார்த்த பிறகு விதிமுறை பார்த்த பிறகு நாங்கள் 3 கட்சிகளும் உடனடியாகவே என்னுடைய பெயரை கூட்டமைப்பின் 3 தலைவர்கள் இருப்பவர்கள் நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒப்புக்கொண்டபடி என்னுடைய பெயரை செயலாளராக செயற்படுத்த வேண்டும்.

அந்த கடிதத்தை அனுப்பி வையுங்கள் என அந்த கூட்டத்தில் 3 கட்சி தலைவர்களும் கூடி எடுத்த முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக தேர்தல் ஆணையகத்தின் அடிப்படையில் சட்டத்தின் அடிப்படையில் அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக என்னை செயலாளராக செயலாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...