Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக் குழுவை நியமிக்கவும்! சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம்

T

The Leader Desk

நவம்பர் 1, 2020 • 5:50 AM

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக் குழுவை  நியமிக்கவும்! சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நவம்பர் 2 ம் திகதி ஊடகவியளார்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஒழிப்புக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் சுதந்திர ஊடக இயக்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
  • தர்மரத்னம் சிவராம் கொலை வழக்கு மற்றும் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்குவது எந்தவொரு அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தபோதிலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்குக் கூட நீதி கிடைக்காத வரலாறே காணப்படுவதாக 'சுதந்திர ஊடக இயக்கம்' கவலை தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

நவம்பர் 2 ம் திகதி ஊடகவியளார்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஒழிப்புக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் சுதந்திர ஊடக இயக்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்குவது எந்தவொரு அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தபோதிலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்குக் கூட நீதி கிடைக்காத வரலாறே காணப்படுவதாக 'சுதந்திர ஊடக இயக்கம்' கவலை தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சீதா ரஞ்சனி மற்றும் செயலாளர் லசந்தா டி சில்வா ஆகியோரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான இரண்டு குற்றச் சம்பவங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதியைக் கொண்டுவரும் போலிக்காரணத்தின் கீழ் கடந்த ஆட்சியின் போது பல சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடங்கியிருந்தாலும், அந்த விசாரணைகள் தற்போது  மெதுவாகவே நடைபெறுகின்றன. 

இலங்கை  வரலாற்றில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான இரண்டு குற்றச்சம்பவங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தர்மரத்னம் சிவராம் கொலை வழக்கு மற்றும் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒரு சாட்சி நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணித்தார்,அவர் இப்போது புதிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகி, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த நிலைமை வழக்கில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் கருத்துப்படி, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லா நேரத்திலும் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் ஊடக சமூகத்திற்கு ஒருபோதும் நீதியை வழங்கவில்லை என அந்த இயக்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக் குழுவை நியமிக்கவும்! சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம் | Tamil Leader | We Lead the Nation