Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

”பறத் தமிழனே, உன்னை கொல்வேன்” வைத்தியரை அச்சுறுத்திய பிரிகேடியர்!

T

The Leader Desk

அக்டோபர் 29, 2020 • 3:31 PM

”பறத் தமிழனே, உன்னை கொல்வேன்” வைத்தியரை அச்சுறுத்திய பிரிகேடியர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி, பிரதமரின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளது.
  • வைத்தியசாலையில் ஏற்பட்ட இந்த நிலைமை சரிசெய்யப்படாத நிலையில், வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
  • அவர் தெரிவித்த கருத்துக்கள் இதோ https://www.youtube.com/watch?v=ilSL49F4PJs&feature=emb_title.
எழுத்து அளவு:

இராணுவத்தின் காலாட்படை படைப்பிரிவின் பிரிகேடியர் கே.கே.எஸ் பரகும் வெலிஓய - சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று, தலைமை வைத்திய அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக,  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிகேடியர் கே.கே.எஸ் பரகும் சம்பத்நுவர மாவட்ட வைத்தியச்சாலைக்கு சென்று நிறுவனத்தின் தலைவரையும் ஏனைய அதிகாரிகள் குழுவையும் பார்த்து, ”பறத் தமிழனே, பிரபாகரன், பயங்கரவாதி, நான் உன்னை கொல்லுவேன், இது எனது பகுதி” என அச்சுறுத்தல் விடுத்த விடயத்தை கவலையுடன் அறிவிப்பதாக, ஒக்டோபர் 28ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு அனுப்பிவைத்துள்ள  கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  பொதுச் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமரின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளது.

போரின்போது பாதுகாப்பு படையினருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வழங்கிய ஒத்துழைப்பும் அந்த கடிதத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.

"தாய் நாட்டை காப்பாற்றுவதற்கான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு வைத்திய உதவியை உறுதிப்படுத்தும் வகையில்,  எங்கள் வைத்தியர்கள் அனைவரும் இராணுவத்தை மரியாதையுடன் நடத்தினர் என்பதை நாங்கள் நினைவுபடுத்துகின்றோம்.”

எனினும், பிரிகேடியர் கே.கே.எஸ் பரகுமின் நடத்தை முப்படையிலும் எதிர்பார்க்கப்படும் ஒழுக்க விழுமியங்களுக்கு முரணானது என்பதோடு, ஏனைய குடிமக்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வைத்தியசாலையில் ஏற்பட்ட இந்த நிலைமை சரிசெய்யப்படாத நிலையில்,  வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நோயாளிகளின் நலனுக்காக இந்த வைத்தியசாலையில் பணியாற்ற தேவையான பாதுகாப்பான நிலைமைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரின் போது GMOA ஆதரவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) போரின் போது ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு தார்மீக மற்றும் வைத்திய உதவிகளை வழங்கியது, எனினும் வைத்திய ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ள நிலையில் இதுத் தொடர்பில் எவரும் அவதானம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி நாட்களில் வன்னி பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தான் உள்ளிட்ட நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அரச  வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தில் தலையிடவில்லை எனவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்த வலயத்தில் பணியாற்றிய சிரேஷ்ட அரச வைத்தியர்  ஒருவர் தெரிவித்திருந்தார்.

குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட போதிலும், அந்த பகுதியில் பணியாற்றிய அவர் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான வைத்தியர்களையேனும் பாதுகாக்கும் பொறுப்பை வைத்திய அதிகாரிகள் சங்கம் புறக்கணித்திருந்ததாக, முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் சுகாதார பணிப்பாளர் துரைராஜா வரதராஜா லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் இதோ 

https://www.youtube.com/watch?v=ilSL49F4PJs&feature=emb_title

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

”பறத் தமிழனே, உன்னை கொல்வேன்” வைத்தியரை அச்சுறுத்திய பிரிகேடியர்! | Tamil Leader | We Lead the Nation