Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தல் சம்பந்தமாக இராணுவத்தினரிடம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்! video

T

The Leader Desk

அக்டோபர் 29, 2020 • 3:05 PM

சுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தல் சம்பந்தமாக இராணுவத்தினரிடம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்! video

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தேகத்திற்கிடமான சுகாதார ஊழியர்களை இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பக்கூடாது என நாட்டின் முன்னணி தாதியர் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
  • இராணுவமோ, பொலிஸாரோ இதில் தலையிட வேண்டாம்" என சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
  • தனிமைப்படுத்தப்பட்ட மற்ற நோயாளிகளுடன் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களை வைத்தியசாலையில் சேர்க்கும் செயற்பாடானது சுகாதார சேவைக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரச தாதியர் சங்கம் எச்சரிக்கிறது.
எழுத்து அளவு:

சந்தேகத்திற்கிடமான சுகாதார ஊழியர்களை இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பக்கூடாது என  நாட்டின் முன்னணி தாதியர் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மற்ற நோயாளிகளுடன் தாதியர்கள் உள்ளிட்ட  சுகாதார ஊழியர்களை வைத்தியசாலையில் சேர்க்கும் செயற்பாடானது சுகாதார சேவைக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரச தாதியர் சங்கம் எச்சரிக்கிறது.

"ஏனென்றால் ஒரு சுகாதார பணியாளர் ஒரு வைத்தியராக, ஒரு தாதியராக செயற்படுகின்றார்.  இதைப் பற்றி அறிவு அவர்களுக்கு காணப்படுகின்றது.  அவர்களை ஏனைய நோயாளிகளுடன் ஒன்றிணைக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒரு விபத்தாக மாறும். அதிலிருந்து விடுபட அவர்களுக்குத் தெரியும்.  ஒருவருக்கு தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கவும் அவர்களுக்குத் தெரியும்”

ஆகவே, அவர்களுக்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென,  அரச தாதியர் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னபிரிய, கொரோனா தடுப்பு அதிகாரிகளிடம்  நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கேட்டுக் கொண்டார்.

இராணுவ தலையீடு இல்லை

சுகாதார அதிகாரிகளை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர் தலையிட வேண்டாமென தொழிற்சங்கத் தலைவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

samanR

"அவர்கள் அறையிலும் வீட்டிலும் தங்கி மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் அதை நன்றாக நிர்வகிக்கிறார்கள். இராணுவமோ, பொலிஸாரோ இதில் தலையிட வேண்டாம்" என சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.

 முதல் நெருக்கமானவர்கள் வீடுகளில்

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கான தனிமைப்படுத்தல்   நிலையங்களில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

"இனிமேல், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபரை வைத்தியசாலைக்குச் அழைத்துச் சென்றாலும், அவர்களது முதல் நெருக்கமானவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனால், அவர்கள் அதே வழியில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்," என இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் முன்னதாக, இராணுவம் தனிமைப்படுத்தலின் போது மக்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...