Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பசிலுக்காகவே இரட்டை குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தேன் நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன்!

T

The Leader Desk

அக்டோபர் 25, 2020 • 11:26 AM

பசிலுக்காகவே இரட்டை குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தேன் நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நான் எதிர்காலத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவை நாடாளுமன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக பார்ப்பதில் அக மகிழ்ச்சியடைகிறேன்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஸர்ரஃப் தெரிவித்துள்ளார்.
  • வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை என்ற பிரிவை அவர்கள் எதிர்த்ததற்கான காரணம் அதுவேயகும்.
  • அமைச்சர்களான உதய கம்மன்பில விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ வருவதை எதிர்த்தனர் என்பது நாமறிந்த உண்மை.
எழுத்து அளவு:

நான் எதிர்காலத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவை நாடாளுமன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக பார்ப்பதில் அக மகிழ்ச்சியடைகிறேன்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஸர்ரஃப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதானது முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சிறுபான்மை சமூகங்களுக்கும் ஒருபொழுதும் எந்தவித தீங்கும் விளைவிக்காது என நான் திடமாக நம்பியதால் 20 ம் திருத்தத்தில் இருந்த இரட்டை பிரஜாவுரிமை பிரிவிற்கு தனது தனிப்பட்ட ஆதரவினை தெரிவித்திருந்தேன்.

அமைச்சர்களான  உதய கம்மன்பில விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ வருவதை எதிர்த்தனர் என்பது நாமறிந்த உண்மை. ஏனெனில் இரட்டை பிரஜாவுரிமையுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்திற்கு வந்தால் இனவாத மற்றும் மதவாதிகளுக்கும் இனவாத மற்றும் மதவாதத்திற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ஒருபொழுதும் ஆதரவாக செயற்படமாட்டார் என்பதனால் அவர்கள் அதனை எதிர்த்தனர்.

இனவாதம் மற்றும் மதவாதத்ததை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் இந்த இனவாத அரசியல் வாதிகளுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம் ஒரு விசமாகவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 20 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை என்ற பிரிவை அவர்கள் எதிர்த்ததற்கான காரணம் அதுவேயகும்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தனது தொலைநோக்குள்ள தலைமைத்துவ குணங்களால் முஸ்லிம் சமூகத்தால் இன்னும் நேசிக்கப்படுகிற ஒருவராக காணப்படுகின்றார். நாடாளுமன்றத்தில் அவர் இருப்பது நிச்சயமாக சமூகங்களிடையே குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்துடன்  நல்லிணக்கம், சமாதானம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கான வலுவான பாதையை வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ  மனிதநேயமுள்ள ஒரு மனிதர்.  2010-2015 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் போது அவரது மனித நேயம் இனவாதமற்ற தன்மை என்பனவற்றை அவர் பல நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டங்களால் அவற்றை நிரூபித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ 20 ஆவது திருத்தம் மூலம் நாடளுமன்றத்திற்கு வரப்போவதனை உணர்ந்த அமைச்சர்களான உதய கம்மன்பில விமல் வீரவன்ச ஆகியோர் அவரின் வருகையை மிகக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஜனாதிபதி கோதபாய ராஜபக்‌ஷ 2021 ல் கொண்டு வரப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இந்த விதி (இரட்டை பிரஜாவுரிமை) சேர்க்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அவர்களை திருபதிப்படுத்த அளித்த வாக்குறுதியின் பின்னர் அவர்கள் (2020.10.22) அன்று இந்த பிரிவுக்கு வாக்களிக்க முடிவு செய்தனர்.  புதிய அரசியலமைப்பு 2021 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இனவாத மற்றும் மதவாதத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த விதிமுறையை (இரட்டை குடியுரிமை விதி) உண்மையிலேயே எதிர்த்தனர், ஆனால் இறுதியாக அவர்கள் அதை எதிர்க்க எந்த வழியையும் இல்லாமல் அதற்கு ஆதரவு வழங்க வேண்டியிருந்தது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்திற்கு ஒரு உறுப்பினராக அல்லது அமைச்சராக வருகிறார் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது, இந்த அரசாங்கத்தை தனது யுக்தியைப்பயன்படுத்தி கொண்டு வந்தவர் அவர் என்பதால் அவரின் வருகைக்கு பின்னர் நாடாளுமன்றம் சுமூகமாக நகர முடியும் என நான் நம்புகிறேன். 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ,  விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போல் இனவாத மற்றும் மதவாத அரசியல்வாதியொருவர் அல்ல. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் சிந்தனையில் தான் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் என்பன உருவாக்கப்பட்டன.  இந்த இரண்டு திட்டங்களாலும் இவ் இரண்டு மாகாணங்களும் பல்துறை அபிவிருத்தி கண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதை தடுக்கும் நோக்கில் எதிர்ப்பு வெளியிடப்பட்ட அந்த பிரிவிற்கு இனவாத மற்றும் மதவாத அரசியல்வாதிகளுக்கு ஒரு சாட்டையடியாகவும் இன நல்லிணகலகத்தினை வலுவூட்ட நாடாளுமன்றத்தினுள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ வருவது மிகவும் அவசியமாகும் என்பதனை உணர்ந்ததன் அடிப்படையில் தான் நான் 20 ம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை உடைய இலங்கைப் பிரஜை  நாடாளுமன்றத்திற்கு வர வழிசெய்யும் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினேன், என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...