Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருப்பது சட்டத் தொழிலுக்கு அவமானம்!

T

The Leader Desk

அக்டோபர் 22, 2020 • 2:58 AM

சந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருப்பது சட்டத் தொழிலுக்கு அவமானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு சட்டத்தரணியாக அவர் கூறியது முழு சட்டத் தொழிலுக்கும் அவமானம் என சட்டத்தரணி ஷெஹாரா ஹேரத் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
  • ஒரு சந்தேகநபரை 35 நாட்களுக்கு கைது செய்வதைத் தடுக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு உதவியமைத் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்தை, சான்றுகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்று அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இந்த கருத்துத் தொடர்பில் ஒரு குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்பதோடு, இது ஒரு சட்டத்தரணியிடம் எதிர்பார்க்கப்படும் நடத்தை மீறலாகும்.
எழுத்து அளவு:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனை பொலிஸார் கைது செய்யத் தவறியமைத் தொடர்பாக கடந்த வார இறுதியில் கேள்விக்கு பதிலளித்த அமைச்சரும், சட்டத்தரணியுமான கம்மன்பில,  தானும் தன்னுடைய  கட்சித் தலைவரான மதுமாதவ அரவிந்த 35 நாட்களாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாக இருந்ததாக கூறியிருந்தார்.

ஒரு சட்டத்தரணியாக அவர் கூறியது முழு சட்டத் தொழிலுக்கும் அவமானம் என சட்டத்தரணி ஷெஹாரா ஹேரத் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

ஒரு சந்தேகநபரை 35 நாட்களுக்கு கைது செய்வதைத் தடுக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு உதவியமைத் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்தை, சான்றுகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்று அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கருத்துத் தொடர்பில் ஒரு குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்பதோடு,  இது ஒரு சட்டத்தரணியிடம் எதிர்பார்க்கப்படும் நடத்தை மீறலாகும்.

அமைச்சர் கம்மன்பில ஒரு சட்டத்தரணியாக பகிரங்கமாக ஒப்புதல் அளிப்பதன் மூலம் சட்டத்தரணிகளுக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாக ஷெஹாரா ஹேரத்  வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மினுவாங்கொடையில் இடம்பெற்ற  முஸ்லிம் விரோத செயற்பாடு தொடர்பாக உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்தவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...