Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நோய் பரவும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை!

T

The Leader Desk

அக்டோபர் 7, 2020 • 1:55 AM

நோய் பரவும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வதேச ஆடைத் தொழிற்சாலையான பிராண்டிக்ஸில் பரவிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 700ஐ கடந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • நடைமுறைகளை மீறுவதற்கு எதிராக, குறிப்பாக தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலையில் நாங்கள் தற்போது இல்லை.
  • நாட்டில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் செல்லுபடியானவை.
எழுத்து அளவு:

சர்வதேச ஆடைத் தொழிற்சாலையான பிராண்டிக்ஸில் பரவிய கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 700ஐ கடந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் செல்லுபடியானவை. எனினும் அவை சட்டப்பூர்வமானவை அல்ல என்பதால் பிரச்சினைகள் காணப்படுகின்றன. நடைமுறைகளை மீறுவதற்கு எதிராக, குறிப்பாக தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலையில் நாங்கள் தற்போது இல்லை.

தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் மாதத்தில் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,  இதுத் தொடர்பாக 1897ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஊடாக இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, முகமூடி அணிவது, கை கழுவுதல் மற்றும் கிருமி நீக்கம் செய்வது போன்ற வைரஸைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு நபரும் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் செயற்படாவிட்டால், அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினால் நேரடியாக வழக்குத் தொடர முடியுமென அவர் மேலும் கூறியுள்ளார். 

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...