Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றமைக்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 19, 2020 • 5:13 AM

பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றமைக்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதானது பொது சேவையை தவறான கலாச்சாரத்திற்கு வழிநடத்துவதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
  • பாதுகாப்புப் படைத் தலைமையகம், ரெஜிமென்ட் மையங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் 51 இராணுவ பயிற்சி நிரலையங்களில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
  • சிவில் நிர்வாகத்திற்காக இராணுவ வீரர்களை நியமிப்பதன் மூலமும், கடந்த காலத்தில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணிகளாலும் இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்கனவே நாட்டில் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:


பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதானது பொது சேவையை தவறான கலாச்சாரத்திற்கு வழிநடத்துவதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைத் தலைமையகம், ரெஜிமென்ட் மையங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் 51 இராணுவ பயிற்சி நிரலையங்களில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் "செழிப்பான நோக்கு”  தேர்தல் அறிக்கைக்கு ஏற்பவும், அவரது அறிவுறுத்தல்களுக்கு அமையவும், பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் செப்டம்பர் 14ஆம் திகதி பயிற்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருந்தது.

அரசாங்கத்தின் தீர்மானமானது தற்போது அரச சேவையில் உள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை  மூலம் "எல்லாவற்றையும் இராணுவத்தால் மாத்திரமே செய்ய முடியும்" என்ற கருத்தை அறிமுகப்படுத்துவது தற்போது பொது சேவையில் பணியாற்றி வரும் இராணுவத்தைத் தவிர ஏனைய  அனைத்து அரசு ஊழியர்களையும் சோர்வடையச் செய்யுமென ஆசிரியர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

சிவில் நிர்வாகத்திற்காக இராணுவ வீரர்களை நியமிப்பதன் மூலமும், கடந்த காலத்தில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணிகளாலும் இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்கனவே நாட்டில் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுச் சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 50,000 பட்டதாரிகள் சிவில் சேவையில் இணைய உள்ளதாகவும், அவர்களுக்கு இராணுவ பயிற்சியை வழங்குவதன் ஊடாக, நாட்டு மக்களுக்கு சிவில் சேவை மீது காணப்படும் நம்பிக்கை இல்லாமல் போகுமெனவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் சிவில் நிர்வாகத் துறையில் ஏராளமான திறமையான, படித்த, புத்திசாலி மற்றும் கடின உழைப்பாளிகள் இருப்பதாகவும், இதில் இராணுவம் தலையீடு செய்வதால் எதிர்காலத்தில் சிவில் சேவையின் தரம் வீழ்ச்சியடையும் எனவும் தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  ஆசிரியர் சங்கத் தலைவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐந்து நிலைகளின் கீழ்

இந்த பயிற்சிகள் ஐந்து கட்டங்களின் கீழ் இடம்பெறுவதுடன் ஒரு மாதத்திற்கு 10,000 பட்டதாரிகள் வரைக்கும் 50,000 பட்டதாரிகளுக்கு ஐந்து மாத காலத்திற்கு இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுவார்கள்

பயிற்சியளிக்கப்பட்ட, முழுமையான மற்றும் ஆற்றல்மிக்க தொழிலாளர் தொகுப்பாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் திறமையான பங்களிப்பை உறுதி செய்வதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக, பட்டதாரி நோக்குநிலை திட்டம் இராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

"இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இது இராணுவ தலைமையகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது."

'தலைமைத்துவம் மற்றும் குழு கட்டமைத்தல் பயிற்சி', 'மேலாண்மை பயிற்சி', 'தனியார் மற்றும் மாநிலத் துறை நிறுவனங்களில் பயிற்சி', 'திட்டப்பணி மற்றும் கள ஆய்வுகள் ',' ஒத்திசைவு மற்றும் பின்னடைவு 'போன்றவை திறமையான உற்பத்தித் துறையைத் தணிக்கும் போது திறமையான பொதுத்துறை ஊழியரை வளர்ப்பதே இதன் நோக்கமென இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதனை கவனத்திற்கொள்ளாது, முன்னைய ராஜபக்ச ஆட்சியின்போது, தலைமைத்துபப் பயிற்சி என்ற பெயரில் அழைக்கப்பட்ட பயிற்சியின் போது, பல்கலைக்கழகம் மாணவர் ஒருவரும் அதிபர் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றமைக்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு! | Tamil Leader | We Lead the Nation