Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகும்! மஹிந்த

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2020 • 4:03 PM

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகும்! மஹிந்த

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும் என தெரிவித்தார்.
  • கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும்.
  • பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார்.
எழுத்து அளவு:

தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும் என தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர்,

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் கூடிய பாராளுமன்றமொன்றை உருவாக்குவதற்கான அவசியம் காணப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும். பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார்.

நாங்கள் இதனைவிட சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வாக்களிப்பதற்கு மக்களுக்கு உள்ள ஆர்வத்தை நாம் பாராட்டுகின்றோம்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதமரின் குடும்பத்தினரும், பிரதமருடன் டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, பிரதமரின் பெற்றோரான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தந்தினா சமரசிங்க திசாநாயக்க ஆகியோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...