Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஜனாதிபதியின் கருத்தால் மத்திய வங்கி தூங்குகிறது! சட்டரீதியான இருப்பு விகிதங்களைக் குறைக்கிறது

T

The Leader Desk

ஜூன் 17, 2020 • 3:41 AM

ஜனாதிபதியின்  கருத்தால் மத்திய வங்கி தூங்குகிறது! சட்டரீதியான இருப்பு விகிதங்களைக் குறைக்கிறது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்தகால அரசுகள் மத்திய வங்கி கொள்ளைக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி மத்திய வங்கி மீது நேற்று (ஜூன் 16) ஜனாதிபதியின் ஆத்திரமடைந்த கருத்தை தொடர்ந்து இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
  • அதன்படி, உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் வைப்புகளுக்கான சட்டரீதியான இருப்பு விகிதத்தை நேற்று முதல் 2% மாக குறைக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
  • இலங்கை மத்திய வங்கியின் இந்த முடிவின் மூலம், 2020 ஆம் ஆண்டில் இதுவரை சட்டரீதியான இருப்பு விகிதம் 3% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
  • இது குறைந்த செலவில் வணிகங்களுக்கான கடன் ஓட்டத்தை அதிகரிக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

கடந்தகால அரசுகள்  மத்திய வங்கி கொள்ளைக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி மத்திய வங்கி மீது நேற்று (ஜூன் 16) ஜனாதிபதியின் ஆத்திரமடைந்த கருத்தை  தொடர்ந்து இலங்கை மத்திய வங்கி  (சிபிஎஸ்எல்) உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தனது முன்மொழிவை ஏற்காவிட்டால், "நாளை காலை" வங்கித் தலைவர்கள் திட்டங்களை ஒப்படைக்குமாறு நேற்று மத்திய வங்கி அதிகாரிகளிடம் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதன்படி, உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் வைப்புகளுக்கான சட்டரீதியான இருப்பு விகிதத்தை நேற்று முதல் 2% மாக குறைக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இந்த முடிவின் மூலம், 2020 ஆம் ஆண்டில் இதுவரை சட்டரீதியான இருப்பு விகிதம் 3% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறைந்த செலவில் வணிகங்களுக்கான கடன் ஓட்டத்தை அதிகரிக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், மத்திய வங்கி நாணய வாரியம் தொடர்ந்து பொருளாதார மற்றும் நிதி சந்தை நிலைமைகளை கண்காணித்து மேலும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்கும்.

ஜனாதிபதியின் உரைக்கு மங்களவின் பதில்:

ஜூன் 16, செவ்வாயன்று ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ, "கொள்கைக்கு" மத்திய வங்கியின் ஆதரவு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தது ஒரு "நியாயமான விஷயம்" என்று கூறி இருந்தார், இதனால் பொருளாதாரம் மேம்படாது இவரின் பேச்சை நினைத்து "வெட்கப்படுகிறேன்" என்று மங்கள  கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அறிக்கை தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நெருக்கடிக்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று   ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார். கடந்த ஏழு மாதங்களில் முறையான நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதார மேலாண்மை இல்லாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டிறுக்கின்றதே தவிர  கொரோனா வைரசால் அல்ல, 2019 டிசம்பரில் திட்டமிடப்படாத வரி அறவிடப்பட்டதே  இதற்கு காரணம் என்றார்.

MS twite

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...