Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தெற்கில் பெண்களை துன்புறுத்திய ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

ஜூன் 12, 2020 • 4:25 PM

தெற்கில் பெண்களை துன்புறுத்திய ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெண் பொலிஸ் அதிகாரியொருவர் இல்லாத நிலையில், ”பெண்கள் மீது கை வைக்க” ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிமை கிடையாது என பிரபல நடிகை சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
  • அமெரிக்காவில் கறுப்பின இனத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கொலை செய்யப்பட்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னிலை சோசலிஷக் கட்சி நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பொலிஸார் தடுத்திருந்தனர்.
  • இந்நிலையில், இந்த விடயத்திற்கு கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரபல நடிகை சமனலி பொன்சேகா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

பெண் பொலிஸ் அதிகாரியொருவர் இல்லாத நிலையில், ”பெண்கள் மீது கை வைக்க” ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிமை கிடையாது என பிரபல நடிகை சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

”பொலிஸ் அதிகாரிகளால் பெண்கள் தாக்கப்பட்டு வாகனங்களில் இழுத்துச் செல்லப்படுவதை தொலைக்காட்சி ஊடாக காணமுடிந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”போராட்டத்தின் போது வாகனத்தில் தூக்கி எறியப்பட்ட ரஷ்மி வித்யாஞ்சலி பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். அவரது மூக்குக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னரே அவர் வாகனத்தில் தூக்கியெறியப்பட்டார்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸாரால் வாகனத்திற்கு தூக்கியெறியப்பட்ட ரஷ்மி வித்யாஞ்சலி நோய்வாய்ப்பட்டு கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பெண்களின் சுகாதாரம் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தவில்லை என நடிகை சமனலி பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

"எங்கள் சகோதரிகளில் சிலர் கைது செய்யப்பட்டதிலிருந்து பொலிஸ் நிலையத்தில் மாதவிடாய் காலத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு புதிய ஆடைகள் தேவை என அவர்கள் கோரியுள்ளனர். எனினும் சட்டத்தரணிகள் ஊடாகவேனும் அவற்றைப் பெற்றுக்கொடுக்க பொலிஸார் மறுத்துள்ளனர்.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பின இனத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கொலை செய்யப்பட்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னிலை சோசலிஷக் கட்சி நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பொலிஸார் தடுத்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் பல்வேறு சர்ச்கைகளைத் தோற்றுவித்திருந்ததோடு, சட்டத்தை மீறி பொலிஸாரே செயற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குறிப்பாக  பெண்கள் பலர் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அவர்களை வாகனங்களில் ஏற்றிய செயற்பாடுகளும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விடயத்திற்கு கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரபல நடிகை சமனலி பொன்சேகா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

”தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கும் இந்த அரசாங்கம் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பதை நாம் அறிவோம்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

”சட்டத்தை மதித்து இடம்பெற்ற இந்த போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பொலிஸாருக்கு காணப்பட்ட உரிமை என்ன? தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டது யார் பொலிஸாரா? அல்லது போராட்டக்காரர்களா?” என சமனலி பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

”அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான சித்திரவதையை நாம் எதிர்க்கவில்லை எனின், நாம்  மனிதாபிமானத்திலிருந்து நீண்ட தூரம் விலகியிருக்கின்றோம் என்றே அர்த்தப்படும். கலைஞர்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.” எனவும் சமனலி பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...