Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பெண் போராளி வைத்தியசாலையில்!

T

The Leader Desk

ஜூன் 10, 2020 • 3:56 PM

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பெண் போராளி வைத்தியசாலையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சில பொலிஸ் அதிகாரிகளினால் ,மனிதநேயமற்ற முறையில் கைது செய்யப்பட்ட ரஸ்மி திவ்யாஞ்சலி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு காலிக்கு செல்லும்போது மயக்கமடைந்துள்ளார்.
  • கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் இரவு வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரப்பட்ட போதிலும் பொலிஸார் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
  • ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டவர்கள் இரவு 10 மணிக்கு நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு பிணை வழங்கப்படடது. பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளான சிலர், இன்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எழுத்து அளவு:

சில பொலிஸ் அதிகாரிகளினால் ,மனிதநேயமற்ற முறையில் கைது செய்யப்பட்ட ரஸ்மி திவ்யாஞ்சலி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு காலிக்கு செல்லும்போது மயக்கமடைந்துள்ளார். பின்னர் உடனடியாக கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படட அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர் முன்னிலை சோஷிஸக் கட்சியின் இளைஞர் பிரிவான  Youth for CHEenge அமைப்பின் காலி மாவட்ட செயற்பாட்டாளராவார்.

53 ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பொலிஸ் வண்டிக்குள் வீசியெறியப்படும் காட்சிகள் ஊடகங்களில் வௌிவந்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள்  கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் இரவு வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரப்பட்ட போதிலும் பொலிஸார் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் தடயவியல் அதிகாரிகளிடம் காட்டப்பட்டபோது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வேண்டுமென்றால் வைத்திசாலைக்கு செல்லுமாறு கூறப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டவர்கள்  இரவு 10 மணிக்கு நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு பிணை வழங்கப்படடது.  பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளான சிலர், இன்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பெண் போராளி வைத்தியசாலையில்! | Tamil Leader | We Lead the Nation