Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மேல் மாகாண சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா கொடுப்பனவு கிடைக்கவில்லை!

T

The Leader Desk

ஜூன் 9, 2020 • 4:45 PM

மேல் மாகாண சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா கொடுப்பனவு கிடைக்கவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேல் மாகாணத்தின் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து எந்தவிதமான கொடுப்பணவுகளையும் அரசு வழங்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
  • இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தொழிற்சங்கம் மே 28ஆம் திகதி ஆளுநரை சந்தித்தபோதிலும், பிரச்சினைக்கு சரியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
  • ஜூன் முதலாம் திகதிக்குள் கொடுப்பணவுகளை செலுத்துவதாக, மாகாண ஆளுநர் வாக்குறுதி அளித்ததாகவும், எனினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
  • மேல் மாகாண சபைக்குச் சொந்தமான சுகாதார நிறுவனங்களில் மாத்திரம் சுமார் 2,500ற்கும் அதிகமான வைத்தியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
எழுத்து அளவு:

மேல் மாகாணத்தின் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து எந்தவிதமான கொடுப்பணவுகளையும் அரசு வழங்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

"இதில் வைத்தியர்களுக்கான மேலதிக கடமைக்கான கொடுப்பனவு, விடுமுறைத் தினக் கொடுப்பணவுகள், ஆய்வுக் கொடுப்பணவுகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கான மேலதிக நேரம் மற்றும் விடுமுறை கொடுப்பணவுகள் ஆகியவை அடங்கும்." என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் தங்கள் மாத சம்பளத்துடன் இந்த கொடுப்பணவுகள் கிடைக்காததால் ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்குவதாக, அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கேயின் கையெழுத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பில், மேல் மாகாண ஆளுநர், மாகாண அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சக அதிகாரிகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டதாகவும், எனினும் அதிகாரிகள் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தொழிற்சங்கம் மே 28ஆம் திகதி ஆளுநரை சந்தித்தபோதிலும், பிரச்சினைக்கு சரியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் முதலாம் திகதிக்குள் கொடுப்பணவுகளை செலுத்துவதாக, மாகாண  ஆளுநர் வாக்குறுதி அளித்ததாகவும், எனினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு திறைசேரி மாகாண சபைக்கு நிதியை வழங்க வேண்டுமெனவும் அல்லது சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அமைச்சுக்கு நிதியை வழங்க வேண்டுமெனவும், அரச வைத்திய அதிகாரிககள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகள் தொடர்ந்து தாமதப்படுத்தும் பட்சத்தில், நிர்வாக சபையைக் கூட்டி, தீர்மானம் மேற்கொண்டு, மேல் மாகாணத்தில் தொழில்முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாண சபைக்குச் சொந்தமான சுகாதார நிறுவனங்களில் மாத்திரம் சுமார் 2,500ற்கும் அதிகமான வைத்தியர்கள் கடமையாற்றி வருகின்றனர். ஏனைய சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் காணப்படுவதாக அந்த சங்கம் வலியுறுத்துகிறது.

மேல் மாகாணத்தில் பணியாற்றும் சுகாதார வீரர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பது அதிகாரிகளின் கடமையும் பொறுப்புமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுக்கே ஊடக அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மேல் மாகாண சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா கொடுப்பனவு கிடைக்கவில்லை! | Tamil Leader | We Lead the Nation