Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளரின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் உளவுத்துறை அதிகாரிகள்!

T

The Leader Desk

ஜூன் 3, 2020 • 4:16 PM

கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளரின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் உளவுத்துறை அதிகாரிகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் ஊடக மன்றத்தின் துணைத் தலைவர் ஊடகவியலாளர் நடேசன் மே 31 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
  • அவர் படுகொலை செய்யப்பட்டு 16 வருடத்தை நினைவுகூறும் வகையில் யாழ்ப்பாண ஊடகக் கழகத்தின் நினைவாக ஏழு பத்திரிகையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டாலும், பாதுகாப்புப் படையின் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  • கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பங்கு பற்றலுடன் கிழக்கு மாகாண சிரேஸ்ட ஊடகவியலாளாலர்களும் மே 31 அன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வளாகத்தில் நடைபெற்றது.
  • சங்கத்தின் தலைவரான தேவா அய்ரன் தலைமையில் நடைபெற்ற நினைவு விழாவில் ஊடகவியலாளரும் நகராட்சி மன்ற உறுப்பினருமான சிவம்பாக்கியநாதன் சிறப்புரையாற்றினார்.
எழுத்து அளவு:

தமிழ் ஊடக மன்றத்தின் துணைத் தலைவர் ஊடகவியலாளர் நடேசன் மே 31 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு 16 வருடத்தை நினைவுகூறும் வகையில் யாழ்ப்பாண ஊடகக் கழகத்தின் நினைவாக ஏழு பத்திரிகையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டாலும், பாதுகாப்புப் படையின் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பொலிஸ் சீருடையில் இருந்தவர்கள் உளவுத்துறை அதிகாரிகள் என சந்தேகப்படுவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்

கொரோனா வைரசின் போது பின்பற்றப்படும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணிந்து  ஊடகவியலாளர்கள் பங்கேற்ற போதிலும், பாதுகாப்புப் படையினர் யாரும் இதனை பின்பற்றவில்லை  என்பதை ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

CID jaffna

கொலை செய்யப்பட்ட சகோதர பத்திரிகையாளருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி  மலர் அஞ்சலி செலுத்த யாழ்ப்பாண ஊடக சமூகம் நடவடிக்கை எடுத்துள்ளது,  ஆனால் அவர்கள் சுதந்திரமாக நினைவுகூறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண ஊடகவியலாளர் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் ரத்னம் தயாபரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பங்கு பற்றலுடன்  கிழக்கு மாகாண சிரேஸ்ட ஊடகவியலாளாலர்களும் மே 31 அன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வளாகத்தில் நடைபெற்றது.

நடேசனுக்காக சிறிது நேரம் மௌனமாக நின்று கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

சங்கத்தின் தலைவரான தேவா அய்ரன் தலைமையில் நடைபெற்ற நினைவு விழாவில் ஊடகவியலாளரும் நகராட்சி மன்ற உறுப்பினருமான சிவம்பாக்கியநாதன் சிறப்புரையாற்றினார்.

வவுனியா தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கமும் ஜூன் 1 ஆம் திகதி அ வர்களது  அலுவலகத்தில் உரையாற்றவுள்ளது

நடேசனின் புகைப்பட த்திற்கு  மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

2004 மே 31, கொலை தொடர்பாக  கருணா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது

2004 மே 31, காலை, ஊடகவியலாளர் நடேசன் மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழ் பத்திரிகை மன்றத்தின் துணைத் தலைவர் நடேசன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தமிழ் ஊடகவியலாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவோ அல்லது உயிருக்கு பயந்து தப்பி ஓடவோ கட்டாயப்படுத்தப்பட்டனர்.

சர்வதேச மனித மனித உரிமைகள் கண்காணிப்பகம் (எச்.ஆர்.டபிள்யூ) என்ற உரிமைகள் அமைப்பு கருணா பிரிவை குற்றம் சாட்டியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான நடேசன் வீரகேசரி, ஐபிசி தமிழ் உட்பட பல கனேடிய ஊடகங்களுக்கும் செய்தியாளராக இருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளரின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் உளவுத்துறை அதிகாரிகள்! | Tamil Leader | We Lead the Nation