Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தொண்டமானின் இறுதிச் சடங்கில் சட்டத்தை மீற இடமளித்த பொலிஸாருக்கு பௌத்த அமைப்பு எதிர்ப்பு!

T

The Leader Desk

ஜூன் 2, 2020 • 4:26 PM

தொண்டமானின் இறுதிச் சடங்கில் சட்டத்தை மீற இடமளித்த பொலிஸாருக்கு பௌத்த அமைப்பு எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டடங்களை மீறிய அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக சுகாதாரத் துறையினரோ, பொலிஸாரோ நடவடிக்கை எடுக்காமை தமக்கு ஆச்சரியமளிப்பதாக, அந்த அமைப்பின் தலைவர் புதுகல ஜனவங்ச தேரர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
  • தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டம் அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்திவிடவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ஆறுமுகனின் இறுதி சடங்கு நிகழ்வுகளில் தெளிவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • அரசியல் அமைப்பின் 12/1 இன் படி, சட்ட அமுலாக்கம், சட்ட செயற்பாடு மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு சமமாக இருக்க வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவர் நினைவூட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் ஆறு நாட்கள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டமை ஊடாக, மக்கள் ஒன்றுகூடவும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும், ஹெல பொது சவிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டடங்களை மீறிய அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக சுகாதாரத் துறையினரோ, பொலிஸாரோ நடவடிக்கை எடுக்காமை தமக்கு ஆச்சரியமளிப்பதாக, அந்த அமைப்பின் தலைவர் புதுகல ஜனவங்ச தேரர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதாகக் கூறி ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், தமது பிள்ளைகளின் பசியைப் போக்க கூலி வேலைக்குச் சென்றவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டம் அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்திவிடவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ஆறுமுகனின் இறுதி சடங்கு நிகழ்வுகளில் தெளிவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பின் 12/1 இன் படி, சட்ட அமுலாக்கம், சட்ட செயற்பாடு மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு சமமாக இருக்க வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவர் நினைவூட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் உயிரிழந்த ஒருவரின் பூதவுடலை ஒரு நாளேனும் வீட்டில் வைப்பதற்கோ அல்லது உயிரிழந்த தமது தந்தைக்கு இறுதி மரியாதையை செலுத்துவதற்கோ பிள்ளைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், இதன் மூலம் சாதாரண மக்களுக்கு ஒரு தனிமைப்படுத்தல் சட்டமும், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு தனிமைப்படுத்தல் சட்டமும் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையுடன், 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஜவங்ச தேரர், அரசியல் பலம்படைத்தவர்களும், அவர்களின் அதிகாரிகளும் தன்னிச்சியையாக செயற்படுவதால், நாட்டின் அதியுயர் சட்டம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுவதாகவும்  வலியுறுத்தியுள்ளார்.

மேற்கூறிய காரணங்கள் அரசியலமைப்பின் 12/1ஆவது பிரிவின் ஊடாக  பாதுகாக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறியதாகவே தோன்றுவதாகவும், ஆகவே மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உத்தரவிடுமாறும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் அறவிடப்பட்ட தண்டப் பணத்தை அவர்களிடமே மீள கையளிக்குமாறும், ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜனவங்ச தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...