Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மகர சிறைச்சாலையில் இளம் கைதி அடித்துக் கொலை!

T

The Leader Desk

ஜூன் 2, 2020 • 3:26 PM

மகர சிறைச்சாலையில் இளம் கைதி அடித்துக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பட்டினி போட்டு ஒரு இளம் கைதியை சித்திரவதை செய்து கொலை செய்ததாக சிறை அதிகாரிகளுக்கு எதிராக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
  • இந்த புகார் மே 3 ம் திகதி மகர சிறையில் இருந்தபோது இறந்த காவிந்த இசுருவின் தந்தை சுமனதாச திசேராவால் கையளிக்கப்பட்டுள்ளது.
  • நான் சொல்ல வேண்டியது என்னவென்றால், என் மகன் கொல்லப்பட்டான்.
எழுத்து அளவு:

பட்டினி போட்டு ஒரு இளம் கைதியை சித்திரவதை செய்து கொலை செய்ததாக சிறை அதிகாரிகளுக்கு  எதிராக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த புகார் மே 3 ம் திகதி மகர சிறையில் இருந்தபோது இறந்த காவிந்த இசுருவின் தந்தை சுமனதாச திசேராவால் கையளிக்கப்பட்டுள்ளது.

ஒரு கயிற்றின் உதவியுடன் தப்பிக்க முயன்றபோது சுவரில் இருந்து விழுந்ததாகவும், ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் எஸ்.பி. ஜாலியா சேனரத்ன தெரிவித்திருந்தார்.

அவரது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அவரது கால்களும் ஒரு கையும் முறிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக ஆர்.எம்.கருணாவதி கூறினார்.

நான் சொல்ல வேண்டியது என்னவென்றால், என் மகன் கொல்லப்பட்டான். நாங்கள் காலையில் அவரைப் பார்க்கச் சென்றபோது அவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டது. கால்கள் உடைக்கப்பட்டிருந்தன. கை உடைக்கப்பட்டு அகலமாக வெடித்திருந்தது.

இறந்த எனது மகன் திறமையான விளையாட்டு வீரர் என நினைவு கூறும் கருணாவதி ஊடகங்களில் தெரிவித்ததாவது பாடசாலையில் ஆறு ஆண்டுகளாக அவரது செலவுகளும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டன என்றும் அவர் கூறினார்.

சிறையில் காவிந்த இசுரு சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...