Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கடற்படையினருக்கு தங்குமிடம் வழங்கிய பாடசாலை ஆசிரியர்கள் கொரோனா ஆபத்தை எதிர்கொள்கின்றனர்!

T

The Leader Desk

மே 31, 2020 • 10:58 AM

கடற்படையினருக்கு  தங்குமிடம் வழங்கிய பாடசாலை ஆசிரியர்கள் கொரோனா ஆபத்தை எதிர்கொள்கின்றனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 200 பாடசாலைகள் பாதுகாப்புப் படையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மேல் மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகள் பாதுகாப்புப் படையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் மேல் / பிலி / கொத்தலாவபுர வித்யாலயத்தில் கடற்படை வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
  • அதன்பிறகு 21 ஆம் திகதி சம்பள பட்டியலில் கையெழுத்திட அதிபர் ஆசிரியர்களை பாடசாலைக்கு அழைத்திருந்தார்.
  • இந்த சூழ்நிலையில் 21 ஆம் திகதி மேல் / பிலி / கொத்தலாவபுர வித்யாலயத்திற்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எழுத்து அளவு:

மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 200 பாடசாலைகள் பாதுகாப்புப் படையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

 அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை!

மேல் மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகள்  பாதுகாப்புப் படையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் மேல் / பிலி / கொத்தலாவபுர வித்யாலயத்தில் கடற்படை வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்பிறகு 21 ஆம் திகதி சம்பள பட்டியலில் கையெழுத்திட அதிபர் ஆசிரியர்களை பாடசாலைக்கு அழைத்திருந்தார்.

இப்போதைக்கு பாடசாலையில் வசிக்கும் சுமார் 6 கடற்படை வீரர்கள் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் 21 ஆம் திகதி பாடசாலைக்கு வரவழைக்கப்பட்ட 26 ஆசிரியர்களையும்  தனிமைப்படுத்த வேண்டு என்ற விளம்பரங்களை கல்கிஸ்ச மற்றும் மொரட்டுவ பொலிசார் காட்சிப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் பாடசாலைகளை பயன்படுத்துவது குறித்து நாங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்தாலும், இது தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் 21 ஆம் திகதி மேல் / பிலி / கொத்தலாவபுர வித்யாலயத்திற்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு  கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆசிரியர்கள் பாதுகாப்பின்மை குறித்து விசாரிக்கப்பட வேண்டும்

ஆசிரியர்களை சம்பள பட்டியலில் ஒப்பமிட பாடசாலைக்கு வருமாறு  கல்வி அமைச்சு அறிவிக்கவில்லை, பாடசாலை ஆசிரியர்களின் பாதுகாப்பற்ற நிலைமை குறித்து கொத்தலாவபுர வித்யாலய அதிபரிடம் விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் மேல் மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்களுக்கு பாடசாலையில் தங்குமிடம் வழங்கியது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...