Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனா இரண்டாவது அலையுடன் வந்தால், தேர்தல் அல்ல ஒன்றுமே செய்ய முடியாது! உயர் சுகாதார சேவை அதிகாரிகள் கூறுகின்றனர்

T

The Leader Desk

மே 25, 2020 • 6:28 AM

கொரோனா இரண்டாவது அலையுடன் வந்தால், தேர்தல் அல்ல ஒன்றுமே செய்ய முடியாது! உயர் சுகாதார சேவை அதிகாரிகள்  கூறுகின்றனர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (மே 24) தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
  • தனிமைப்படுத்தப்படும் சட்டங்கள் கண்டிப்பாக செயற்படுத்தப்பட வேண்டும்.
  • நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுடன், நாடு மீண்டும் திறக்கப்படும், பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
எழுத்து அளவு:

நேற்று (மே 24) தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுடன், நாடு மீண்டும் திறக்கப்படும், பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகவே, இப்போது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு வழங்கப்பட்ட பரிந்துரை:

மேலும் கருத்து தெரிவித்த  வைத்தியர் அனில் ஜாசிங்க,பொதுச் சேவையின் முதல் அதிகாரியான, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர பொதுத் தேர்தலை நடத்தக்கூடிய நாட்டின் சுகாதார நிலைமை குறித்து விளக்குமாறு  எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டின் சுகாதார பின்னணியை தெரிவித்தேன். இதில் எவ்வித அரசியல் நிலைப்பாடும் இல்லை.

நாட்டை மீண்டும் திறப்பது கொரோனா நோய்க்கான அபாயத்தைக் குறைக்காது. ஆகவே, இன்று போலல்லாமல், நோயைக் கட்டுப்படுத்தும் சரியான சுகாதாரப் பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்படும் சட்டங்கள் கண்டிப்பாக செயற்படுத்தப்பட வேண்டும்.

'அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார முடிவுகள் எடுக்கப்படவில்லை'

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து நாடு சுகாதார வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவும் சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார். ஆனால் அரசியல்வாதிகள் நாட்டின் பல்வேறு பிரிவுகளுக்கு விரைவாக திறக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர். அரச ஊழியர்கள் என்ற வகையில் இது எங்களுக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கிறது.

அரச அதிகாரியாக முப்பது ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான் சுதந்திரமாக பணியாற்றினேன். அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார முடிவுகள் எடுக்கப்படவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...