Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சட்டமா அதிபர் துறைக்கு பேஸ்புக் ஆதரவைப் பெற திட்டம்! (வீடியோ)

T

The Leader Desk

மே 19, 2020 • 6:10 PM

சட்டமா அதிபர் துறைக்கு பேஸ்புக் ஆதரவைப் பெற  திட்டம்! (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டமா அதிபர் துறைக்கு ஒரு ஆலோசனையை முன் வைத்துள்ளார்.
  • பேஸ்புக் வெளிப்படுத்தியுள்ள சிறப்பு அறிக்கையில், ஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இனவெறி சித்தாந்தங்களை பரப்பிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டமா அதிபர் துறையின் பொறுப்பாகும் என்று கூறினார்.
  • முந்தைய ஆட்சியின் போது முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.தொடர்ச்சியாக முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களை நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவர் சட்டமா அதிபர் துறைக்கு ஒரு ஆலோசனையை முன் வைத்துள்ளார். முகநூல் முழுவதும் பரவிய வதந்திகளும் வெறுப்பு அறிக்கைகளும் 2018 ஆம் ஆண்டில் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுத்தன என்று விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இலங்கையை உலுக்கிய கொடிய இனவாத தாக்குதலுக்காக பேஸ்புக் கடந்த வாரம் மன்னிப்பு கோரியுள்ளது.

பேஸ்புக் வெளிப்படுத்தியுள்ள சிறப்பு அறிக்கையில், ஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இனவெறி சித்தாந்தங்களை பரப்பிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டமா அதிபர் துறையின் பொறுப்பாகும் என்று கூறினார். முந்தைய ஆட்சியின் போது முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.தொடர்ச்சியாக முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களை நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பேஸ்புக் மூலம் வெறுப்பை பரப்புவதற்கும் சமூகங்களிடையே சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் பரப்புவதற்கு பங்களித்தவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த சட்டமா அதிபர் திணைக்களத்தால் முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்த சிலர் இனவாதவாத தாக்குதலை வழிநடத்தியவர்கள் என்று கூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தற்போதுள்ள அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பதாக சுட்டிக் காட்டினர்.

தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சட்டமா அதிபருக்கு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க சட்டமா அதிபர் முன்வரவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சட்டமா அதிபர் துறைக்கு பேஸ்புக் ஆதரவைப் பெற திட்டம்! (வீடியோ) | Tamil Leader | We Lead the Nation