Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை பலவந்தமாக வாக்கு மூலம் பெறுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்!

T

The Leader Desk

மே 12, 2020 • 6:09 AM

மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை பலவந்தமாக வாக்கு மூலம் பெறுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தங்களது பிள்ளைகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி மூன்று சிறார்களின் பெற்றோர்களான ஜைனத்துல் ஜுஹைரியா, முகமது ரிஃப்கான் மற்றும் ஹபீஸ் முகமது நியாஸ் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
  • ஏப்ரல் 24 மற்றும் 26 ஆம் திகதிளில், சிஐடி என கூறப்படும் அதிகாரிகள் குழு, தங்கள் வீடுகளுக்கு வந்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு புகைப்படத்தைக் காட்டி இவரை தெரியுமா என்று அதட்டினர்.
  • இந்த மூன்று மனுக்களில் பிரதிவாதிகளாக பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி.
எழுத்து அளவு:

தங்களது பிள்ளைகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி மூன்று சிறார்களின் பெற்றோர்களான ஜைனத்துல் ஜுஹைரியா, முகமது ரிஃப்கான் மற்றும் ஹபீஸ் முகமது நியாஸ் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மூன்று மனுக்களில் பிரதிவாதிகளாக பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி இயக்குநர், எஸ்.எஸ்.பி.திலகரத்ன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இருப்பினும் உதவித்தொகையின் கீழ் தங்களது குழந்தைகளை மதரசாக்களுக்கு படிக்க அனுப்பியதாக அவர்கள் கூறினர்.

ஏப்ரல் 24 மற்றும் 26 ஆம் திகதிளில், சிஐடி என கூறப்படும் அதிகாரிகள் குழு, தங்கள் வீடுகளுக்கு வந்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு புகைப்படத்தைக் காட்டி இவரை தெரியுமா என்று அதட்டினர். தங்கள் பிள்ளைகளுக்கு மதரசாக்களில் ஆயுதபயிற்சி வழக்கப்படுகிறதா என்று கேட்டனர் மத்ரசாக்களில் ஆயுதப் பயிற்சி வழங்கப்படவில்லை என்றும், தங்கள் பிள்ளைகளுக்கு படத்தில் உள்ள நபரைத் தெரியாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இந்த அதிகாரிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் கூறப்பட்ட போதிலும், தங்களுக்கு தெரியாமல் தங்கள் பிள்ளைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களை தடுத்து வைத்திருக்கும் சரியான இடம் தங்கள் பிள்ளைகளுக்குத் தெரியாது என்று மனுதாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

(lankaviews.com)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...