Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு இராணுவ ஜெனரல்! நிதி அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி!

T

The Leader Desk

மே 11, 2020 • 1:05 PM

சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு இராணுவ ஜெனரல்! நிதி அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும்,நிதி அமைச்சின் செயலாளராக மூத்த பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
  • இதற்கிடையில், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் என்ற போர்வையில் நாடு படிப்படியாக ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கிறது என்று கூறினார்.
  • சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, ராணுவ மருத்துவ சேவைகளின் இயக்குநர் ஜெனரலும், ராணுவ மருத்துவப் படையின் கட்டளை அதிகாரியும் ஆவார்.
  • இவர் ஜனவரி 29, 1960 அன்று களுத்துறையில் பிறந்தார் களுத்துறை ஞானோதய கல்லூரி மற்றும் திஸ்ஸ வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளார்.
எழுத்து அளவு:

மேலும்,நிதி அமைச்சின் செயலாளராக மூத்த பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் ஏற்கனவே பல அரசு நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் என்ற போர்வையில் நாடு படிப்படியாக ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கிறது என்று கூறினார்.

post vimu

இருப்பினும், வீதி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர், ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிரியை பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தனது மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ச மூலம் பிரேமசிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க யார்?

Sanjeewa munasinghe

சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, ராணுவ மருத்துவ சேவைகளின் இயக்குநர் ஜெனரலும், ராணுவ மருத்துவப் படையின் கட்டளை அதிகாரியும் ஆவார்.

இவர் ஜனவரி 29, 1960 அன்று களுத்துறையில் பிறந்தார் களுத்துறை ஞானோதய கல்லூரி மற்றும் திஸ்ஸ வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளார்.

தனது உயர்தர கல்வியை முடித்த பின்னர் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நுழைந்து 1986 இல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று மருத்துவரானார்.

மருத்துவப் பட்டம் முடித்த அவர் 1986 இல் இலங்கை ராணுவத்தில் சேர்ந்தார்.

அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து பின்னர், இலங்கை இராணுவ அகடமியில் படித்த அவர் இலங்கை இராணுவ மருத்துவப் படையில் கெப்டனாக சேர்ந்தார்.

அவர் இராணுவத்திற்கு செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக

போர் வீரர் பதக்கம்,வாரியர் பதக்கம், உயர் சேவை பதக்கம், கிழக்கு மனிதாபிமான செயல்பாட்டு பதக்கம், வடக்கு மனிதாபிமான பதக்கம், முழு பூமி பதக்கம், வடகிழக்கு பதக்கம், வடமராட்சி செயல்பாட்டு பதக்கம், ரிவிரச செயல்பாட்டு பதக்கம், 50 வது சுதந்திர ஆண்டு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டுவிழா மற்றும் இலங்கை ஆயுதப்படைகள் நீண்ட சேவை பதக்கம் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு இராணுவ ஜெனரல்! நிதி அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி! | Tamil Leader | We Lead the Nation