Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனாவின் போது அவசர தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் ஜாதிக சமகி பலவேகய!

T

The Leader Desk

மே 7, 2020 • 4:03 PM

கொரோனாவின் போது  அவசர தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் ஜாதிக சமகி பலவேகய!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த மனுவை 'ஜாதிக சமகி பலவேகய பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்துள்ளார்.
  • அதன்படி, பாராளுமன்றத்தை மார்ச் 2 ம் திகதி கலைத்து, ஏப்ரல் 25 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியை ஜனாதிபதி அறிவித்தார்.
  • பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாததால் தேர்தலை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 23, 2019 அன்று பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டம், ஏப்ரல் 30 வரை மட்டுமே அரச நிதியைச் செலவழிக்க தற்போதைய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.
எழுத்து அளவு:

இந்த மனுவை 'ஜாதிக சமகி பலவேகய பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்துள்ளார்.

பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அதன் உறுப்பினர்கள் என்.ஜே. அபேசேகர மற்றும் ரத்னஜீவன் ஹூல் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற்று புதிய பாராளுமன்றம்  கூட்டப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் தினேஷ் விதானபதிரன தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றத்தை மார்ச் 2 ம் திகதி கலைத்து, ஏப்ரல் 25 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியை ஜனாதிபதி அறிவித்தார்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாததால் தேர்தலை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அரசியலமைப்பின் விதிகளுக்கு மாறாக"

ஜூன் 20 தேர்தலுக்கான காலக்கெடு அரசியலமைப்பின் விதிகள் மற்றும் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்டத் தவறியது போன்றவற்றுக்கு முரணானது என்று மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

அக்டோபர் 23, 2019 அன்று பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டம், ஏப்ரல் 30 வரை மட்டுமே அரச நிதியைச் செலவழிக்க தற்போதைய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.

இந்தப் பின்னணியில், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தேவையான நிதிக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

அரச நிதிகள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுவது அரசியலமைப்பை மீறுவதாகும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வருவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறுவது தொடர்பான தீர்ப்பையும் மனுதாரர் கோருகிறார்.

இறுதி முடிவு எடுக்கும் வரை ஜூன் 20 ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பையும், மார்ச் 2 ம் தேதி வெளியிடப்பட்ட ஜனாதிபதி வர்த்தமானியையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொரோனாவின் போது அவசர தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் ஜாதிக சமகி பலவேகய! | Tamil Leader | We Lead the Nation