Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொழும்பு மீண்டும் ஆபத்தில்! மோதரவில் இறந்தவரின் கணவர் பேக்கரி பொருட்களை விற்கும் வியாபாரி

T

The Leader Desk

மே 6, 2020 • 4:22 PM

கொழும்பு மீண்டும் ஆபத்தில்! மோதரவில் இறந்தவரின் கணவர் பேக்கரி பொருட்களை விற்கும் வியாபாரி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த பெண்ணிற்கு நோய் அறிகுறிகள் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
  • ஏப்ரல் 26 அன்று ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக அந்த பெண் எலிஹவுஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
  • கொழும்பு மோதரையில் இறந்த பெண் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் பி பிரிவின் 13 வது மாடியில் வசித்து வந்ததாகவும், அவர் எவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளானார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும் அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகர் ஷெஹன் அதுக்கோரலே தெரிவித்தார்.
  • இறந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பது உறுப்பினர்களும் பி.சி.ஆர் சோதணைகளை மேற்கொண்ட பின்னர் கந்தகாடு தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த பெண்ணிற்கு நோய் அறிகுறிகள் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 26 அன்று ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக அந்த பெண் எலிஹவுஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அந்த பெண் உடல்நிலை மோசமடைந்ததால் மே 2 ம் தேதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது அறிகுறிகள் கொரோனா வைரஸின் அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன என்பதை அறிய மருத்துவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது சிக்கலானது!

கொழும்பு மோதரையில் இறந்த பெண் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் பி பிரிவின் 13 வது மாடியில் வசித்து வந்ததாகவும், அவர் எவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளானார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும் அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகர் ஷெஹன் அதுக்கோரலே தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் கணவர் பேக்கரி பொருட்களை முச்சக்கர வண்டியில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களில் விற்றுள்ளார்.

இறந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பது உறுப்பினர்களும் பி.சி.ஆர் சோதணைகளை மேற்கொண்ட பின்னர் கந்தகாடு தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் தனிமைப்படுத்தல்:

“இந்த பெண் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையின் ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (06) முதல் அங்கு வசித்து வந்த வர்கள் , பி.சி.ஆர் சோதனைகளுக்கான மாதிரிகள் எடுப்பதற்காக மெத்சாண்டா பிளாட்ஸுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு பதினைந்து பி.சி.ஆர் சோதனைகள் பெற திட்டமிடப்பட்டது. இதன் விளைவாக, தொடர்ந்து அவ்வாறு செய்வோம் என்று நம்புகிறோம். இந்த வீட்டு வளாகத்தில் கிட்டத்தட்ட 5,000 பேர் வாழ்கின்றனர். இப்பகுதி இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று மோதரவுக்கு பொறுப்பான பொது சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

(ஆதாரம் - நெத் செய்தி)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...