Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கொரோனா தொற்றின் போது தேர்தலை நடத்த வேண்டுமென்றால் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்! தே.ஆ.த

T

The Leader Desk

மே 3, 2020 • 7:35 AM

கொரோனா தொற்றின் போது தேர்தலை நடத்த வேண்டுமென்றால் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்! தே.ஆ.த

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று (மே 02) நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
  • அந்த அறிக்கையில் மேலும் கூறுவதாவது “மே 2 ம் திகதி நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், அவர்கள் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பித்தனர்.
  • மேலும், தேர்தலை நடத்துவதற்கு, நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று (மே 02) நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அவர் சொல்வது என்னவென்றால், பொதுத் தேர்தலை அரசாங்கம் எப்படியாவது நடத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அதற்காக நாடாளுமன்றத்தை கூட்டி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

பிரச்சாரம் செய்ய முடியாது - அரசியல் கட்சி பிரதிநிதிகள்

election campain

நிலவும் தொற்றுநோய் காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தை செய்ய முடியாது

அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளை தவிர வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரு கலந்துரையாடலின் போது அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக (anidda.lk) தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறுவதாவது

“மே 2 ம் திகதி நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், அவர்கள் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பித்தனர்.

சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம், சமூக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைரஸ் நிபுணர்கள் உள்ளிட்ட வல்லுநர்கலாள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவது இன்னும் சாத்தியமில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலை நடத்துவதற்கு, நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் திறக்கப்பட வேண்டும் என்றும், நியாயமான தேர்தலை நடத்துவதற்கு நீதித்துறை பொதுவாக செயல்படுவது முக்கியம் என்றும் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அரசாங்க பிரச்சாரப் பணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை!

பொதுத் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்க மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் அடிப்படையில் எதிர்க்கட்சி இன்னும் பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை.

ஆனால், மொட்டுக் கட்சி வேட்பாளர்கள் பாதுகாப்பு படையினரின் உத்தரவுகளை புறக்கணித்து வீடு வீடாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால் சமூக ஊடகங்களில் ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

election campain2

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...