Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஹிஸ்புல்லாவை தடுத்து வைத்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயல்!

T

The Leader Desk

ஏப்ரல் 24, 2020 • 5:35 PM

ஹிஸ்புல்லாவை தடுத்து வைத்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.
  • கைதுக்கான காரணம் அவருக்கு தெரிவிக்கப்படாத நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
  • எனினும், அவர் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்களின் பின்னர், கடந்த 16 ஆம் திகதி முதல் ஹிஸ்புல்லாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எழுத்து அளவு:

ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையானது, உள்ளூர் மற்றும் சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புகள் காணப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு புத்தளத்தில் வைத்து சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார்.

கைதுக்கான காரணம் அவருக்கு தெரிவிக்கப்படாத நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

சட்டத்தரணி ஹிஸ்புல்லாவிற்கு, சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் எனவும், சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய மனித உரிமை அமைப்பு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான சட்டம் என்று முத்திரை குத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கடுமையான விதிகளை மீறி முஸ்லிம் சட்டத்தரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தின் படி, கைதி ஒருவர் 72 மணிநேர தடுப்புக் காவலின் பின்னர் அவருக்கு சட்ட உதவியைப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், அவர் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்களின் பின்னர், கடந்த 16 ஆம் திகதி முதல் ஹிஸ்புல்லாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“கொடூரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் அரசாங்கத்தின் பொறுப்பை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை என, அந்த அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனர் பிரடெரிக் ரவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும், சட்டத்தரணி ஹிஸ்புல்லாவிற்கு சட்ட ரீதியாக தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும், இரகசியத்தன்மை பேணப்படுவதையும், சட்ட உதவியை நாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற அதிகாரி ஒருவர் தனது தொழிலை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு, தடையாக சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பதாக, 117 தனிநபர்களும், ஆறு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹிஸ்புல்லாவை தடுத்து வைத்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயல்! | Tamil Leader | We Lead the Nation