Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை முதலாளிகள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோருகின்றனர்!

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2020 • 6:40 AM

வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை முதலாளிகள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோருகின்றனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலகெங்கிலும் தொற்றுநோய்களை எதிர்கொண்டு ஆடைகளை வாங்குபவர்கள் புதிய ஓடர்களை வழங்காததால், சுதந்திர வர்த்தக வலய முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகளை இயங்கவைப்பதற்கு மூலதனம் (பணம்) வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • ஏப்ரல் 21 ம் தேதி அரசு மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடனான சந்திப்பில் முதலாளிகள் வெளிப்படுத்தியபடி, மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முடியாமல் போகும்.
  • புதிய ஓடர் பெறாததாலும், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நேரத்தில் முடிக்கப்பட்ட பொருட்களை விற்க முடியாததாலும், மொத்த தொழிலாளர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே வேலை செய்ய முடியும் என்று முதலாளிகள் தொழிலாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தனத்திடம் தெரிவித்தனர்.
  • இருப்பினும், சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதிடும் முன்னணி தொழிற்சங்கமான பொது சேவைகள் ஊழியர் சங்கம், ஊழியர்களை குறைக்க அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

உலகெங்கிலும் தொற்றுநோய்களை எதிர்கொண்டு ஆடைகளை வாங்குபவர்கள் புதிய ஓடர்களை வழங்காததால், சுதந்திர வர்த்தக வலய முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகளை  இயங்கவைப்பதற்கு  மூலதனம் (பணம்) வழங்குமாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 21 ம் தேதி அரசு மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடனான சந்திப்பில் முதலாளிகள் வெளிப்படுத்தியபடி, மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முடியாமல் போகும்.

புதிய ஓடர் பெறாததாலும், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நேரத்தில் முடிக்கப்பட்ட பொருட்களை விற்க முடியாததாலும், மொத்த தொழிலாளர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே வேலை செய்ய முடியும் என்று முதலாளிகள் தொழிலாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தனத்திடம் தெரிவித்தனர்.

இருப்பினும், சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதிடும் முன்னணி தொழிற்சங்கமான பொது சேவைகள் ஊழியர் சங்கம், ஊழியர்களை குறைக்க அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர்கள் ஏற்கனவே ஒரு சில சலுகைகளை பயன்படுத்தி வருகின்றனர் என்று யூனியன் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக தொழிலாளர் பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்று தொழிலாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ் கூறுகிறார்.

அதன்படி, இலங்கை முதலாளிகள் கூட்டமைப்பு, ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் மன்றம், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகள் தங்களது திட்டங்களை சமர்ப்பிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளனர்.

இலங்கை முதலாளிகள் சம்மேளனம் மற்றும் வர்த்தக சபை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின்னர் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் ஒப்புக் கொண்டதாக திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு தகவல் பணிப்பாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...