Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து மீள் பரிசீலனை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது!

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2020 • 2:18 PM

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது  குறித்து மீள் பரிசீலனை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுகாதார அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • கொவிட் 19 வைரஸ் ஒரு புதிய வைரஸ் என்றும், அதன் செயற்பாடுகள் குறித்த எந்த பரிந்துரைகளும் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியிடப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் 182 நாடுகளின் நிலைப்பாடு: எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அரசு சாரா நிபுணர்களின் குழு, உயிரற்ற ஊடகங்களில் பாக்டீரியா பரவக்கூடும் என்றாலும், வைரஸ் பரவ முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
  • இது உலக சுகாதார அமைப்பு மற்றும் 182 நாடுகளின் நிலைப்பாடு என்றும் குழு சுட்டிக்காட்டியது.
எழுத்து அளவு:

சுகாதார அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பின் போது  மருத்துவர்கள் மற்றும் அடக்கம் செய்ய முன்மொழியப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இடையே மூன்று மணி நேரம் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடல்கள் குறித்து பரிந்துரைகளை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் தடயவியல் மருத்துவர்கள் உட்பட ஒரு குழுவும், அரசு மருத்துவர்கள் உட்பட நிபுணர்களின் மற்றொரு குழுவும் கலந்துரையாடலில் பங்கேற்றன.

பேராசிரியர் ரிஸ்வி ஷெரிப், பேராசிரியர் ஷெரிஃப்டீன், பேராசிரியர் ஹனிபா, பேராசிரியர் பெர்னாண்டோ, பேராசிரியர் ஏகநாயக்க, ஆசாத் அலி மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் இலியாஸ், ரசிக் ஸரூக், மற்றும் டாக்டர் ரிஸ்வி ஷெரிப் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் சடலங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய கொரோனா நோயாளிகளின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் டாக்டர் பதிரன உள்ளிட்ட நிபுணர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் ஒரு புதிய வைரஸ் என்றும், அதன் செயற்பாடுகள் குறித்த எந்த பரிந்துரைகளும் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியிடப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் 182 நாடுகளின் நிலைப்பாடு:

'All is well': Triage and lies await Italy's critical coronavirus patients  ...

எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அரசு சாரா நிபுணர்களின் குழு, உயிரற்ற ஊடகங்களில் பாக்டீரியா பரவக்கூடும் என்றாலும், வைரஸ் பரவ முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது உலக சுகாதார அமைப்பு மற்றும் 182 நாடுகளின் நிலைப்பாடு என்றும் குழு சுட்டிக்காட்டியது.

இந்த முடிவு முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் கலாச்சார உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை என்பதைக் சுட்டிக் காட்டிய அரசு சாரா நிபுணர் குழு அறிவியல் மற்றும் சமூக அம்சங்களை கவனத்தில் எடுப்போமானால் கொரோனா தொற்றால் இறந்த உடல்களை அடக்கம் செய்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கக்கூடிய மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கொரோனாவாள் இறந்த உடல்களை அடக்கம் செய்ய அரசாங்க தரப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒப்புக் கொண்டுள்ளது.

இருப்பினும், டாக்டர் சன்னா பெரேரா பலமுறை கொரோனாவால் இறந்த  உடல்கள் பயங்கரவாதிகளால் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...