Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனாவுக்கு இடையில் அவசர தேர்தல்: மக்களுக்கு மரண தண்டனை - மங்கள

T

The Leader Desk

ஏப்ரல் 15, 2020 • 2:25 PM

கொரோனாவுக்கு இடையில் அவசர தேர்தல்: மக்களுக்கு மரண தண்டனை - மங்கள

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில், ஒருமாதகாலம் ஒட்டுமொத்த சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அர்ப்பணிப்பு மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அர்ப்பணிப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது .
  • நேற்று கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 15 பேர் இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் இன்று (ஏப்ரல் 15) காலை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
  • நிச்சயமாக, நீங்கள் வீடு வீடாகச் செல்ல வேண்டும், துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும், உங்கள் கட்சியின் கொள்கைகளை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
  • ஆனால் இந்த நாட்டின் மருத்துவ வல்லுநர்களும், WHO மற்றும் பிற நாடுகளும் கொரோனா வைரஸிலிருந்து 100% விடுபட்டுள்ளோம் என்பதை ஒப்புக் கொள்ளும் வரையில் நாம் தேர்தலை நடத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்.
எழுத்து அளவு:

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில், ஒருமாதகாலம் ஒட்டுமொத்த சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அர்ப்பணிப்பு மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அர்ப்பணிப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது .

ஒன்லைனில் வீடியோ மூலமாக முன்னாள் அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நேற்று கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 15 பேர் இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் இன்று (ஏப்ரல் 15) காலை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தொற்றுநோய் இருக்கின்றபோதிலும் ஒரு விறுவிறுப்பான பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

"இந்த மாபெரும் தியாகத்தினை வார்த்தைகளால் மட்டும், பாராட்ட முடியாது

“கிட்டத்தட்ட ஒரு மாதமாக, இந்த நாட்டு மக்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான பெரும் போராட்டத்தில் பல தியாகங்களைச் செய்துள்ளனர்.

மேலும், இந்த வைரசை கட்டுப்படுத்த நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அரச அதிகாரிகள் தங்கள் உயிரையும் பாராமல் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர்.

இந்த உறுதிப்பாட்டை நாம் வார்த்தையில் மட்டும் பாராட்ட முடியாது.

நாங்கள் ஒரு தேர்தளில் வாக்களிக்க , வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச்சீட்டைப் போடுவது மட்டுமல்ல.

அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க, பல வாரங்கள் நாம் பணியாற்ற வேண்டும்.

நிச்சயமாக, நீங்கள் வீடு வீடாகச் செல்ல வேண்டும், துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும், உங்கள் கட்சியின் கொள்கைகளை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, தேர்தல் நாளிலும், எங்கள் எல்லா படாசலைகளிலும் நூறாயிரக்கணக்கான வாக்காளர்கள் வரவேண்டி இருக்கும்.

அப்பாவி மக்களின் சடலங்களுக்கு மேல் நின்று தேர்தலை நடாத்த தயாரா?

நிச்சயமாக, அப்பாவி மக்களின் சடலங்களுக்கு மேல் நின்று வாக்களிக்க நான் தயாராக இல்லை. இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் இந்த நாட்டின் மருத்துவ வல்லுநர்களும், WHO மற்றும் பிற நாடுகளும் கொரோனா வைரஸிலிருந்து 100% விடுபட்டுள்ளோம் என்பதை ஒப்புக் கொள்ளும் வரையில் நாம் தேர்தலை நடத்துவது  பேரழிவுக்கு வழிவகுக்கும்.

மக்கள் சார்பாக நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்

எவ்வாறாயினும், தேர்தல் நடைபெறும் வரை, அரசாங்கம், குறிப்பாக கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பாராளுமன்றத்திற்கு அதிக நிதி ஒதுக்க விரும்பினால் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட முடியும்.

எனவே, ஜனாதிபதி நாட்டின் தலைவராக பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றத்தை கூட்டியவுடன்,

பொறுப்பான எதிர்க்கட்சியாக, தேவையான நிதியை அரசு ஒதுக்கும் போது  அதை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

ஆனால் அவசரப்பட்டு கொரோனாவுக்கு இடையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால்

இந்த நாட்டில் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு எந்தத் தீங்கும் இல்லை என்று,

தேர்தல் ஆணையாளருக்கு,

சுகாதார நிபுணர்கள்,பொறுப்பான அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அரசாங்கமும், மக்களுக்கு 100% உத்தரவாதம் அளிக்க முடிந்தால்,

அந்த நாளில், நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை நடத்தலாம், புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் பணியாற்ற முடியும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொரோனாவுக்கு இடையில் அவசர தேர்தல்: மக்களுக்கு மரண தண்டனை - மங்கள | Tamil Leader | We Lead the Nation