Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டார்: ஜனாதிபதி சட்டத் தரனி பின் தொடர்ந்து துரத்தியுள்ளார் !

T

The Leader Desk

ஏப்ரல் 15, 2020 • 8:07 AM

ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டார்: ஜனாதிபதி சட்டத் தரனி பின் தொடர்ந்து துரத்தியுள்ளார் !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அவர்களை நேற்று மாலை புத்தளத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
  • கைது செய்யப்பட்ட நபர்கள் 40 மற்றும் 41 வயதுடைய புத்தளத்தில் வசிப்பவர்கள்.இந்த சம்பவம் குறித்து சிஐடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
  • கிஜாஸ் ஹிஸ்புல்லா, ஜனாதிபதி சட்டத்தரனி இதற்கிடையில், வழக்கறிஞரான கிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்யும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அவர்களை நேற்று மாலை புத்தளத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 40 மற்றும் 41 வயதுடைய புத்தளத்தில் வசிப்பவர்கள்.இந்த சம்பவம் குறித்து சிஐடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

கிஜாஸ் ஹிஸ்புல்லா, ஜனாதிபதி சட்டத்தரனி

இதற்கிடையில், வழக்கறிஞரான கிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்யும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீன் வழக்கிலும், வைத்தியர் ஷாஃபி விசாரணையிலும் ஜனாதிபதி வழக்கறிஞர் கிஜாஸ் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தேர்தல் திணைக்களத்தின்  உறுப்பினர் ரத்னஜீவன் கூல் தெரிவிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி கிஜாஸ் ஹிஸ்புல்லா, மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது பாராளுமன்றத்தை கலைக்க அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்று கூறியுள்ள அவர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த விதம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் விளக்கினார், தேர்தளை நடத்துவது மட்டுமல்ல, வாக்காளரின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதன் மூலமும் இந்த ஆணை பாதுகாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போது ராஜபக்சக்கள் அளித்த வாக்குறுதிகள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்ஷசக்களின் முழக்கங்களில் ஒன்று, கோதபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடன், மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டது

சிங்கள-பௌத்த பிரச்சாரத்தை இலக்காகக் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய இலக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இருந்தார்.

அரசாங்கம் இப்போது ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது, ரிஷார்ட் பதுயுதீன் காரணியை எடுத்துக்காட்டி சிங்கள-பௌத்த வாக்குகளை பெற்றுக்கொள்ளும் பிரச்சாரத்தை மீண்டும் மேற்கொண்டதற்காக அரசாங்கதி ன் செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...