Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனா தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்யாதது ஏன்? ஐக்கிய நாடுகள் சபை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது

T

The Leader Desk

ஏப்ரல் 14, 2020 • 5:36 AM

கொரோனா தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்யாதது ஏன்? ஐக்கிய நாடுகள் சபை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த கடிதம் ஏப்ரல் 8 ம் திகதி அனுப்பப்பட்டுல்லதாக "கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது.
  • மேலும், சிறுபான்மையினரான முஸ்லிம்களை அடக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை சுகாதார அமைச்சு விளக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது.
  • சடலங்களை அடக்கம் செய்வது குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகள் குறித்து வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடக்குமாறும் இலங்கையில் சுகாதார அமைச்சகம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை திருத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.
எழுத்து அளவு:

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்ளவும், கொரோன தொற்றினால் இறக்கும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மதிக்கவும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இந்த கடிதம் ஏப்ரல் 8 ம் திகதி  அனுப்பப்பட்டுல்லதாக  "கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது.

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகள் குறித்து வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடக்குமாறும் இலங்கையில் சுகாதார அமைச்சகம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை திருத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மோதலுக்கான காரணங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் சமூகம் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வைத் தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சிறுபான்மையினரான முஸ்லிம்களை அடக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை சுகாதார அமைச்சு விளக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது.

காரணங்கள் குறித்த விளக்கத்தை ஐ.நா. 48 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ள அதே வேளை, அடுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையில் இது சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது, ​​ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையில் செயல்படுவது பொருத்தமானதல்ல என்றும், சடலங்களை அடக்கம் செய்வதைத் தடுக்கும் உத்தரவுகளை ஒருதலைப்பட்சமாக எடுக்கக்கூடாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடக்கம் செய்யும் உரிமைகளை மதித்தல் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சை நிறுத்துங்கள் என ஐ.நா. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

UN Part 1

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொரோனா தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்யாதது ஏன்? ஐக்கிய நாடுகள் சபை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது | Tamil Leader | We Lead the Nation