Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

QR முறையை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு இல்லை!

T

The Leader Desk

ஜூன் 20, 2026 • 4:01 PM

QR முறையை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முறைய (QR Code) முழுமையாக நீக்குவது தொடர்பாக அரசாங்கமோ அல்லது கூட்டுத்தாபனமோ இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
  • இதன்படி, உலக சந்தையில் ஒரு கொள்கலன் டீசலின் விலை 1.06 டொலராலும், 92 ரக பெற்றோல் கொள்கலன் ஒன்றின் விலை 2.58 டொலராலும் நேற்றைய தினம் அதிகரித்துள்ளது.
  • இது தொடர்பான ஆலோசனைகளோ அல்லது கலந்துரையாடல்களோ இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

முறைய (QR Code) முழுமையாக நீக்குவது தொடர்பாக அரசாங்கமோ அல்லது கூட்டுத்தாபனமோ இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைகளோ அல்லது கலந்துரையாடல்களோ இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த மசகு எண்ணெய் விலைகள், நேற்றைய தினம் மீண்டும் சற்றே அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, உலக சந்தையில் ஒரு கொள்கலன் டீசலின் விலை 1.06 டொலராலும், 92 ரக பெற்றோல் கொள்கலன் ஒன்றின் விலை 2.58 டொலராலும் நேற்றைய தினம் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தற்போதைய விலை நிலவரம் ஸ்திரமாக நீடிக்கும் பட்சத்தில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது என்பதால், உள்நாட்டில் தற்போதைய விலையிலேயே தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியும் என நிர்வாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வரும் நாட்களில் உலக சந்தையில் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின்போது உள்நாட்டிலும் விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...