Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு!

T

The Leader Desk

ஜூன் 20, 2026 • 3:33 PM

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து, தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.
  • தினசரி 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், 85க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரில் வந்து சாட்சியங்களையும் தகவல்களையும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • தற்போது மக்கள் மத்தியில் OMP-யின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கை அதிகரித்துள்ளதால், மாவட்ட மட்ட அமர்வுகளுக்கு அதிகளவில் மக்கள் வருகை தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

சேகரிக்கப்பட்டுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளார

செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறியுள்ளார்

மேலும் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முழுமையாக சட்டப்பூர்வமாக இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்

அரச நிதியுடன் செயல்பட்டாலும், இது எந்தவொரு இராணுவ பிரிவு, பொலிஸார் அல்லது அரசியல் தரப்புக்கும் சார்பாக செயல்படாத சுயாதீன ஆணைக்குழு எனவும் அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து, தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.

தற்போது மக்கள் மத்தியில் OMP-யின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கை அதிகரித்துள்ளதால், மாவட்ட மட்ட அமர்வுகளுக்கு அதிகளவில் மக்கள் வருகை தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், 85க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரில் வந்து சாட்சியங்களையும் தகவல்களையும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களிடையே நிலவும் தவறான புரிதல்களை நீக்கி உண்மையை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...