பாலின மாற்று சிகிச்சைகள் அல்லது அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை வைத்தியசாலை நிர்வாகம் முற்றாக மறுத்துள்ளது.
வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அஜித் தன்தநாராயண (Dr. Ajith Danthanarayana), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரரால் (Ven. Elle Gunawansa Thero) கூறப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள், பின்னர் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
"இந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற வகையில், இத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் இந்த நிறுவனத்தில் நடைபெறவில்லை என்பதை நான் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று டொக்டர் தன்தநாராயண தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்விடயம் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க வைத்தியசாலை தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பரப்பப்பட்டு வரும் இந்தத் தவறான தகவல்களைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


