தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
2026 மே 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதன் சமூக மருத்துவ விசேட நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
"அதி தீவிர அபாயகரமான 39 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதற்கு மேலதிகமாக, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் காணப்படுகின்றன. மாவட்ட ரீதியாகப் பார்த்தால், 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களுள் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்."
பாடசாலைகள், அரச நிறுவனங்கள், வேலைத்தளங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றமை பூச்சியியல் ஆய்வுகள் (Entomological Surveys) மூலம் தெரியவந்துள்ளதாக விசேட நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.


